தொடர் தோல்விகளா? ஒரு முறை கும்பகோணத்தில் இந்த கோயில்களுக்கு சென்று வாருங்கள்
தமிழ் நாடு ஒரு ஆன்மீக பூமி என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் குறிப்பாக மனிதனாக பிறந்த எல்லோரும் கட்டாயம் கும்பகோணத்தில் அமைய பெற்று இருக்கும் கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்து வரவேண்டும்.
காரணம், கும்பகோணத்தில் அமைந்து உள்ள ஓவ்வொரு கோயில்களுக்கும் நமக்கு ஜாதத்தில் இருக்கும் தோஷத்தை நிவர்த்தி செய்யக்கூடிய சக்தி பெற்ற திருத்தலம் ஆகும் . அப்படியாக, வாழ்க்கையில் சந்திக்கும் தொடர் தடைகள் விலக நாம் கும்பகோணத்தில் செல்ல வேண்டிய கோயில்களை பற்றி பார்ப்போம்.
1. நீண்ட நாட்களாக குழந்தைக்காக காத்திருப்பவர்கள் கருவளர்ச்சேரி அகிலாண்டேஸ்வரி கோவில் சென்று வர, விரைவில் நல்ல செய்தி கிடைக்கும்.
2. இறைவன் அருளால் கரு உண்டானாலும், அந்த குழந்தை ஆரோக்கியமாகவும், தாய்க்கு சுகப்பிரசவம் நடக்கவும் திருக்கருகாவூர் முல்லைவனநாதர் கோயில் சென்று வழிபாடு செய்யலாம்.
3. தீராத உடல் ஆரோக்கிய குறைபாடுகள் உள்ளவர்கள் வைத்தீஸ்வரன் கோவில் சென்று வரலாம்.
4. எந்த பிறவி எடுத்தாலும் ஞானத்தோடு பிறக்க சுவாமிமலை முருகனை வழிபாடு செய்து வர அப்பன் அருளால் மனம் தெளிவு பெரும்.
5. குழந்தைகள் மந்தமாக இருந்தால் ஒரு முறை கூத்தனூர் சரஸ்வதி கோயில் அழைத்து சென்று வாருங்கள்.
6. கால சூழ்ச்சியால் வலிமை இழந்து இருப்பவர்கள் பட்டீஸ்வரம் அருள்மிகு தேனுபுரீசுவரர் திருக்கோவில் சென்று வழிபாடு செய்து வாருங்கள்.
7. உங்கள் தலையெழுத்து மாற ஒரு முறை கட்டாயம் கும்பகோணம் பிரம்மன் கோயில் சென்று வழிபாடு செய்து வாருங்கள்.
8. திடீர் பொருளாதார இழப்புகள் மற்றும் தொழிலில் நஷ்டம் சந்தித்தவர்கள் அருள்மிகு வேங்கடாசலபதி சுவாமி திருக்கோயில் தரிசனம் செய்து வாருங்கள்.
9. உங்களிடம் பணம் மற்றும் சொத்து வாங்கி ஏமாற்றியவர்களிடம் இருந்து அதை மீட்க திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி சென்று வாருங்கள்.
10. திருமணத்தில் தடைகள் சந்திப்பவர்கள் திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோயில் சென்று தரிசித்து வரலாம்.
11. கால சூழ்நிலையால் பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் கோயில் சென்று வழிபாடு செய்து வாருங்கள்.
12. தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவம் அகல கும்பகோணம் மகாமகத் திருக்குளத்தில் நீராடல் செய்யுங்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |