கோலாகலமாக நடந்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
தஞ்சையில் இருந்து சுமார் 5km தொலைவில் புகழ்பெற்ற புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.
மக்களின் காவல் தெய்வமாக விளங்கும் இக்கோவிலில் சுமார் 21 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 3ஆம் திகதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜைகளும், 4ஆம் திகதி நவக்கிரக ஹோமம், திரவ்யாஹூதி, பூர்ணாஹூதியும் நடைபெற்றது.
இதனைதொடர்ந்து, 5ஆம் திகதி மகாலட்சுமி ஹோமம், திரவ்யாஹூதி, பூர்ணாஹூதியும், 6ஆம் திகதி சாந்தி ஹோமம், மூர்த்தி ஹோமம், பூர்ணாஹூதியும் நடைபெற்றது.
7ஆம் திகதி காலை விக்னேஸ்வர பூஜை, கஜ பூஜை நடத்தப்பட்டு, மாலை திருக்குடங்கள் யாகசாலை எழுந்தருளுதல் செய்யப்பட்டு, முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கின.
தொடர்ந்து சனிக்கிழமை காலை 2ஆம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. பின்னர், மாலை 3ஆம் கால யாகசாலை பூஜைகள், திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி நடைபெறவுள்ளது.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 4ஆம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. மாலை 5ஆம் கால யாகசாலை பூஜை நடைபெற்று, திரவ்யா ஹூதி, பூர்ணாஹூதி முடிவடைந்து, தீபாராதனை நடைபெறும்.
இன்று (10-2-2025) திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மகா கும்பாபிஷேக பெருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |