புரட்டாசி மாதம் பிறந்தவரா நீங்கள்? இந்த விஷயங்களில் உங்களை யாரும் நெருங்க முடியாது
ஜோதிடத்தில் ஒவ்வொரு மாதத்தில் பிறந்தவர்களுடைய குணங்களும் ஒவ்வொரு விதமாக இருக்கும். மேலும் எந்த மாதத்தில் நாம் பிறகின்றமோ அந்த மாதத்திற்கு உரிய குணாதிசயங்களும் அமைந்திருக்கும். அப்படியாக புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள் அவர்கள் குணாதிசயங்கள் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.
பொதுவாக புரட்டாசி மாதம் என்பது புதன் பகவானுக்கு உரிய மாதமாகும். ஆதலால் இந்த மாதத்தில் பிறக்கக்கூடிய குழந்தைகள் மிகவும் புத்திசாலியாக இருப்பார்கள். இந்த மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் எதையும் எளிதில் தெரிந்து கொண்டு புரிந்து கொண்டு கற்றுக் கொண்டு செயலாற்றும் திறமை படைத்தவர்களாக இருப்பார்கள்.
ஆரம்ப காலங்களில் சில கஷ்டங்கள் இவர்கள் சந்தித்தாலும் பிற்காலங்களில் நல்ல செல்வ வளங்களோடு இவர்கள் இருப்பார்கள். புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்கள் எந்த ஒரு சூழ்நிலையையும் எளிதாக சமாளித்து தன் பக்கம் இழுத்து வைத்துக் கொள்ளக்கூடிய ஒரு நபராக இருப்பார்கள்.
அதேபோல் இவர்கள் பொய் சொல்வதையும் சாமர்த்தியமாக சொல்லி சமாளிக்கும் திறன் பெற்றவர்கள். இவர்கள் வீட்டில் அதிக அளவில் புத்தகத்தை வாங்கி வைத்து படிக்க வேண்டும் என்று ஆர்வம் கொள்வார்கள்.
மேலும் புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்களுடைய ஜாதகத்தில் செவ்வாய் சூரியன் சனி பலமாக இருந்தால் இவர்கள் ராணுவம் தீயணைப்பு போன்று துறைகளில் மிகப்பெரிய அளவில் வருவார்கள்.
இவர்கள் எப்பொழுதும் பேசும் பொழுது பிறரை சிரிக்க வைப்பதிலும் அவர்கள் தன் வசம் இழுத்து வைத்து கொள்வதிலும் திறமை பெற்றவர்கள். இவர்கள் மனதில் லட்சியத்தை வைத்துக்கொண்டு போராடும் திறன் பெற்றவர்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







