புரட்டாசி மாதத்தின் முக்கிய விரதங்களும் அதன் பலன்களும்
தமிழ் மாதங்களில் பெருமாள் வழிபாட்டிற்கு மிக முக்கிய மாதமாக இந்த புரட்டாசி மாதம் கொண்டாடப்படுகிறது.அப்படியாக அந்த மாதத்தில் பலரும் பல விரதங்கள் இருந்து பகவானை வழிபாடுவார்கள்.அந்த வகையில் புரட்டாசி மாதத்தின் முக்கியமான விரதங்கள் அதன் பலன்களையும் பற்றி பார்ப்போம்.
சித்தி விநாயக விரதம்
புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தியில் விநாயகருக்காக இருக்கும் விரதம் இது. இந்நாளில் விரதம் இருந்து, விநாயகரை வழிபட்டால் வாழ்க்கையில் ஏற்பட்ட தடைகள் யாவும் விலகும்.
சஷ்டி - லலிதா விரதம்
புரட்டாசி மாத வளர்பிறை சஷ்டியில் பரமேஸ்வரியை நினைத்து கடைப்பிடிக்கப்படும் விரதம் இது. இந்நாளில் விரதம் இருந்து அம்பாளை வழிபட்டால் மாங்கல்ய பாக்கியம் அருளிச்செய்வாள்.
அனந்த விரதம்
புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தசி அன்று கடைப்பிடிக்க வேண்டிய விரதம் இது. பக்தியுடன் இந்த விரதத்தை கடைபிடித்தால், தீராத வினைகள் எல்லாம் தீரும்.சகல நன்மைகளும் வாழ்க்கையில் நடக்கும்.
அமுக்தாபரண விரதம்
புரட்டாசி வளர்பிறை சப்தமியில், உமா மகேஸ்வரின் அருள் கிடைக்க இருக்கும் விரதம் இது. இவ்விரத வழிபாட்டால் சந்ததி செழிக்கும்.பிள்ளைகள் படிப்பிலும் ஆரோக்கியத்திலும் சிறந்து விளங்குவர்.
ஜேஷ்டா விரதம்
புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியில் இருக்கும் விரதம் இது. இந்த விரத நாளில், அருகம்புல்லை கொண்டு சிவனையும் விநாயகரையும் வழிபட்டால் குடும்பத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் அனைத்தும் தீரும்.
மஹாலட்சுமி விரதம்
புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி முதல் பதினாறு நாட்கள் லட்சுமிதேவியைப் பிரார்த்தித்து இருக்கும் விரதம் இது. ஓவ்வொரு நாளும் பக்தியோடு விரதம் இருந்து வழிபட்டு வந்தால் குடும்ப கஷ்டம்,பண கஷ்டம் விலகி தொழில் முன்னேற்றம் உண்டாகும்.
கபிலா சஷ்டி விரதம்
புரட்டாசி மாதத் தேய்பிறை சஷ்டியில், சூரியனை பூஜை செய்து, பழுப்பு வண்ணம் உடைய பசுமாட்டை ஆபரணங்களால் அலங்கரித்து பூஜிக்கும் விரதம் இது. இவ்விரதம் காரிய சித்திகளை உண்டாக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |