பொருளாதார முன்னேற்றம் கொடுக்க போகும் புதன்- எந்த ராசிக்கு திடீர் ஜாக்பாட்
புதன் பகவான் ஒரு மனிதனின் தொழில் மற்றும் வியாபாரத்தை குறிக்கக்கூடியவர். அப்படியாக, மீன ராசியில் இருக்கும் புதன் பகவான் 2 மாதம் 9 நாட்களுக்கு பிறகு வரும் மே 7ஆம் தேதி அதிகாலை 4.13 மணிக்கு மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.
இந்த பெயர்ச்சி அனைத்து ராசிகளுக்கு ஒரு வித தாக்கத்தை உண்டாக்கும். அந்த சில ராசிகள் அவர்கள் வேலை பார்க்கும் துறையில் சிறந்து விளங்குவார்கள். அவர்கள் எந்த ராசிகள் என்று பார்ப்போம்.
தனுசு:
புதன் பகவானின் இந்த மேஷ ராசி பெயர்ச்சி தனுசு ராசிக்கு பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். நீண்ட நாள் நிலுவையில் இருந்த கடன்களை அடைப்பீர்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குடும்பத்தில் நற்செய்திகளால் மகிழ்ச்சி உண்டாகும்.
மிதுனம்:
புதன் பகவானின் இந்த மேஷ ராசி பெயர்ச்சி மிதுன ராசிக்கு மனதில் நல்ல தெளிவை தரும். வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் விலகி நேர்மறை ஆற்றல் பெருகும். கணவன் மனைவி இடையே நல்ல அன்பு பரிமாற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறந்து விளங்கும்.
சிம்மம்:
புதன் பகவானின் இந்த மேஷ ராசி பெயர்ச்சி சிம்ம ராசிக்கு எடுத்த காரியத்தில் வெற்றியை கொடுக்க போகிறது. இந்த காலகட்டத்தில் உங்கள் மனதில் உள்ள விருப்பங்கள் நிறைவேறும். மனதிற்கு பிடித்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். மன அழுத்தம் குறையும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |