புதனின் இடமாற்றத்தால் செல்வத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் யார்?
ஒரு மனிதனின் புத்திசாலித்தனம், அறிவு, பேச்சுத்திறமை மற்றும் தொழிலுக்கு அதிபதியாக விளங்கக்கூடியவர் புதன் பகவான்.இவர் வருகின்ற வரும் பிப்ரவரி 22-ம் தேதி மாலை 7 மணிக்கு கும்ப ராசியில் பயணம் செய்ய உள்ளார்.
அப்படியாக புதனின் இந்த ராசி மாற்றம் சில ராசிகளுக்கு சாதகமாக இல்லை என்றாலும் சில ராசிகளுக்கு நன்மை வழங்க போகிறது.அப்படியாக புதனின் இந்த மாற்றத்தால் அதிர்ஷ்டத்தை பெற போகும் ராசிகள் யார் என்று பார்க்கலாம்.
ரிஷபம்:
புதனின் இந்த இடப்பெயர்ச்சியானது ரிஷப ராசிக்காரர்களுக்கு பல நாள் தடைகளை உடைக்க போகிறது.இவர்களுக்கு தொழில் மட்டும் அலுவலகத்தில் நல்ல மாற்றம் நடக்கும்.சிலருக்கு பதவி உயர்வு,சம்பள உயர்வு கிடைக்கும்.இவர்களுடைய வாழ்க்கை மனமகிழ்ச்சியாக அமையும்.
சிம்மம்:
புதனின் இந்த இடப்பெயர்ச்சியானது சிம்ம ராசிக்காரர்களுக்கு மனதில் உள்ள கவலைகளை போக்கும் காலமாக அமைய போகிறது.குடும்பத்தில் சந்தோசம் நிலவும்.சிலர் வியாபாரத்திற்காக வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம்.உங்கள் பணவரவு அதிகரிக்கும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி வாழ்வில் மிக சிறந்த மாற்றத்தை கொடுக்க போகிறது.பிரிந்து சென்ற கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள்.சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் உருவாகும்.நீண்ட நாள் தடைபட்ட காரியம் முடிவு பெரும்.சிலருக்கு பூர்விக சொத்துக்களில் உண்டான பிரச்சனைகள் விலகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |