புதன் பகவானால் வெற்றியை தன் வசம் ஆக்க போகும் 4 ராசிகள்

Report

புதன் பகவான் தற்போது விருச்சிக ராசிக்கு டிசம்பர் 16 முதல் புதன் பெயர்ச்சியாகிறது. புதன் சஞ்சரிப்பதால் சிலரது வாழ்வில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். மேலும்,ஜனவரி 4, 2025 வரை விருச்சிக ராசியில் இருக்கும் புதன், அதன் பிறகு தனுசு ராசிக்கு மாறுகிறார்.

அந்த நேரத்தில் புதனும் பெயர்ச்சியில் இருக்கும், ஆனால் அதன் ராசி மாறும்.டிசம்பர் 16 முதல் புதன் நேரடியாகத் திரும்புவதால், 4ம் ராசிக்காரர்கள் வியாபாரம் மற்றும் வேலைகளில் முன்னேற்றம் காண்பார்கள்.மேலும்,எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் உண்டாகும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

கும்பம்:

கும்ப ராசிக்கு புதனின் நேரடி தாக்கம் அதிர்ஷ்டத்தை உண்டாக்கும்.அலுவலகத்தில் சக ஊழியர்கள் உதவியாக இருப்பார்கள்.பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும்.யாரையும் நம்பி இந்த வேளையில் கடன் கொடுக்க வேண்டாம்.வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்வீர்கள்.கடினமாக உழைக்கும் காலம்.

சிம்மம்:

சிம்ம ராசியில் புதன் புதன் நேரடியாக சஞ்சரிப்பதால் மனதில் மகிழ்ச்சியும் புதிய வாய்ப்புகளும் உங்களை தேடி வரும்.சுப நிகழ்ச்க்காக பணத்தை செலவு செய்வீர்கள்.கணவன் மனைவி இடையே உறவு மேம்படும்.உடல் நிலை சீராகும்.தொழில் ரீதியாக நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் வெற்றியை தரும்.

புண்ணியம் சேர 12 ராசிகள் செய்யவேண்டிய தானங்கள்

புண்ணியம் சேர 12 ராசிகள் செய்யவேண்டிய தானங்கள்

ரிஷபம்:

ரிஷப ராசியில் புதன் நேரடியாக செல்வதால் சுப பலன்கள் உண்டாகும்.பண புழக்கம் அதிகமாக இருக்கும்.பிறருக்கு கொடுத்த கடன் திரும்ப பெறுவதற்கான காலம்.கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல ஆதாயம் கிடைக்கும்.வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் கவனமாக இருக்க வேண்டும்.

மிதுனம்:

மிதுன ராசியில் புதனின் நேரடி சஞ்சாரத்தால் புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் கிடைக்கும்.பூர்விக நிலத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும்.வேலையில் உங்களுக்கு சிறந்த அங்கீகாரம் கிடைக்கும்.இந்த நேரம் உங்களுக்கு சாதகமாக உள்ளது. புதனின் அசுப தாக்கத்தால், உங்கள் வார்த்தைகளின் தாக்கம் அதிகரித்து, சரியான முடிவுகளை எடுப்பதில் வெற்றி பெறுவீர்கள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US