கோடீஸ்வர யோகத்தை கொடுக்கும் புதன் சூரியன் சேர்க்கை- ராஜ யோகம் பெரும் ராசிகள் யார்?
நவகிரகங்களில் இளவரசனாக இருக்கக்கூடியவர் புதன் பகவான். இவர் தான் ஒருவரின் படிப்பு பேச்சு தொழில் போன்ற விஷயங்களுக்கு காரணியாக இருக்கக்கூடியவர். மேலும், இவர் மிகவும் குறுகிய காலகட்டத்தில் தங்கள் ராசியை மாற்றக்கூடியவர். அதோடு சூரிய பகவான் நவகிரகங்களில் தலைமை கிரகமாக இருக்கிறார்.
இவர் ஒவ்வொரு தமிழ் மாதம் பிறக்கும் பொழுதும் தன்னுடைய ராசியை மாற்றுகிறார். இந்நிலையில் புதன் பகவான் மே 23ஆம் தேதி ரிஷப ராசியில் நுழைந்தார். ரிஷபத்தில் ஏற்கனவே சூரியன் பயணம் செய்து வருகிறார்.
இதனால் புதாத்திய ராஜ யோகம் உருவாகும். இந்த யோகம் 12 ராசிகளுக்கும் மிக பெரிய தாக்கத்தை கொடுக்கக்கூடியதாக சொல்லப்படுகிறது. அப்படியாக, இந்த யோகத்தால் தங்கள் வாழ்க்கையில் குறுகிய காலத்தில் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகள் யார் என்று பார்ப்போம்.
மேஷம்:
மேஷ ராசிக்கு சூரியன் மற்றும் புதன் சேர்கை தொழில் ரீதியாக நல்ல மாற்றமும் முன்னேற்றமும் கொடுக்கிறது. இந்த காலகட்டத்தில் இவர்களின் பேச்சு ஆற்றல் அதிகரிக்கும். புதிய முதலீடுகள் செய்வதால் இவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். நண்பர்கள் மூலமாக தொழிலில் சில லாபங்களை பெறுவார்கள்.
கடகம்:
கடக ராசிக்கு சூரியன் மற்றும் புதன் சேர்க்கை மிகவும் சாதகமான பலனை கொடுக்கும். திருமண வாழ்க்கை இந்த காலகட்டத்தில் சிறப்பாக அமையும். தொழிலை விரிவு செய்யும் பணியில் ஈடுபடுவீர்கள். வேலைக்காக வெளியூர் பயணம் செல்ல நேரலாம். உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்கு சூரியன் மற்றும் புதனின் சேர்கை வேலை பார்க்கும் இடத்தில் உங்கள் வருமானத்தை அதிகம் பெற்று கொடுக்கப்போகிறது. காதல் வாழ்க்கையில் சந்தித்த பிரச்சனைகள் நல்ல முடிவை பெரும். திருமணத்திற்காக வரன் தேடுபவர்களுக்கு நல்ல வரன் அமையும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |