புதன் வக்ர பெயர்ச்சி: அடுத்து 70 நாட்களுக்கு ராஜயோகத்தைப் பெறும் 4 ராசிகள்
கடந்த ஜூன் 22, 2025 அன்று கடக ராசியில் பயணம் செய்த புதன், வரும் ஆகஸ்ட் 30, 2025 வரையில் அதே ராசியில் பயணிக்கிறார். இதனிடையே ஜூலை 18, 2025 தொடங்கி வரும் ஆகஸ்ட் 11, 2025 வரையில் புதன் வக்ர நிலையில் பயணிக்க உள்ளார்.
புதனின் இந்த வக்ர நிலை 12 ராசிகளுக்கும் அவர்களின் குடும்பம், பொருளாதாரம், படிப்பு ஆகியவற்றில் நல்ல மாற்றத்தை கொடுக்க உள்ளது. அப்படியாக, புதனின் இந்த 70 நாள் வக்ர பெயர்ச்சியால் எந்த ராசிகளுக்கு நல்ல அதிர்ஷ்டம் காத்திருக்கிறது என்று பார்ப்போம்.
மிதுனம்:
புதன் கிரகத்தின் தாக்கம் மிதுன ராசிக்கு குடும்ப வாழ்க்கையில் நல்ல மகிழ்ச்சியும் அமைதியும் கொடுக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் பெறுவீர்கள். சமுதாயத்திலும் உறவினர்கள் மத்தியிலும் நல்ல பெயர் கிடைக்கும். குடும்பத்தின் தேவைகளும் அவர்களின் ஆசைகளையும் நிறைவேற்றி வைப்பீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகி செல்லும்.
கன்னி:
கன்னி ராசிக்கு மன நிலையில் நல்ல மாற்றம் கிடைக்கும். இவர்களுக்கு எதிர்பாராத செல்வமும், பணமும் வந்து சேரும். வீடு, வாகனம் வண்டி வாங்கும் யோகம் உருவாகும். சுயதொழில் செய்யவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அதில் ஏற்பட்ட தடைகளும் தடங்கலும் விலகும். காதல் மற்றும் திருமண வாழ்க்கை நல்ல முறையில் மாற்றம் பெரும்.
துலாம்:
துலாம் ராசிக்கு புதன் வக்ர கதியின் தாக்கம் தொழில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்க உள்ளது. அவர்களின் திறமைக்கு ஏற்ப பாராட்டுக்கள் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு, மற்றும் அலுவலகத்தில் முக்கிய பொறுப்புகளை தேடிக்கொடுப்பார்கள். சமுதாயத்தில் பெரிய அந்தஸ்தில் உள்ளவர்களின் நட்பு உங்களுக்கு கிடைக்கும்.
தனுசு:
தனுசு ராசிக்கு இந்த காலக்கட்டத்தில் பெரிய அளவில் வெற்றியைத் தேடிக் கொடுக்கப்போகிறது. அரசியல் செல்வாக்கு உள்ளவர்களின் நட்புகள் கிடைக்கும். உங்களுக்கு ஏற்பட்ட கடன் பிரச்சனை விலகி செல்லும். தொழிலில் உங்கள் முதலீடுகளுக்கு ஏற்ப நல்ல லாபம் பெறுவீர்கள். குடும்பத்தில் நீண்ட நாட்களாக சந்தித்த பிரச்சனை ஒன்று நல்ல முடிவைப்பெறும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |