பிரமிடு வடிவில் உள்ள சிவன் கோவில்: எங்கு உள்ளது தெரியுமா?

By Yashini May 01, 2024 12:30 AM GMT
Report

சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் புதுகுப்பம் என்ற கடற்கரை கிராமத்தில் பிரமிடு வடிவில் நடராஜருக்கு கோயில் ஒன்று அமைந்துள்ளது.

எகிப்தின் பிரமிடு வடிவத்தில் அமைந்துள்ள தனித்துவமான கட்டடக்கலை காரணமாக உலகம் முழுவதிலும் இருந்து மக்களை ஈர்க்கிறது இக்கோயில்.

ஜம்மு காஷ்மீர் அரச வம்சத்தை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரான கரண்சிங் சிறந்த சிவபக்தர். இவர்தான் இக்கோயிலை 2000ம் ஆண்டு கட்டியுள்ளார். 

2004ல் ஏற்பட்ட சுனாமியால் அழிந்த இக்கோயிலை ஆரோவில் எர்த் இன்ஸ்டிடியூட் உதவியுடன் 2006ல் முன்பு இருந்த அதே இடத்தில் பெரிய அளவில் கட்டப்பட்டுள்ளது.

பிரமிடு வடிவில் உள்ள சிவன் கோவில்: எங்கு உள்ளது தெரியுமா? | Pyramid Shaped Temple Of Nataraja  

உறுதியான செம்மண் கற்களைக் கொண்டு கட்டப்பட்ட இக்கோயிலின் கருவறையில் ஐம்பொன்னாலான கார்னேஸ்வரர் நடராஜர் கோலத்தில் காட்சி தருகிறார்.

அதோடு இக்கோயிலில் கயிலாசபதி லிங்கமும், சிவகாமி அம்மையும், விநாயகர், முருகன் ஆகியோருக்கு சிலைகளும் உள்ளன.

இக்கோயிலுக்கு வெளியே பிரம்மாண்டமான சிவலிங்கம் ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. லிங்கத்திற்கு எதிரே அழகான நந்தி ஒன்றும் உள்ளது.

பிரபஞ்சத்தின் சக்திகள் அனைத்தையும் ஒன்று திரட்டி வைத்துக் கொள்ளும் சக்தி பிரமிடுகளுக்கு உண்டு.

அதனால் நாம் பிரமிடுக்குள் அமர்ந்து தியானம் செய்யும் போது நமக்கு விரைவில் தியானம் கைகூடும்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US