மூன்றாம் இடத்தில் ராகு இருந்தால் கவனமாக இருக்க வேண்டுமாம் ஏன் தெரியுமா?

By Sakthi Raj Nov 03, 2026 07:37 AM GMT
Report

ஜோதி ரீதியாக ராகு என்பது மாயை கிரகமாக இருக்கிறது. அந்த வகையில் மூன்றாம் இடத்தில் ராகு பகவான் இருக்கின்ற போது சில இடங்களில் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.

மூன்றாம் இடத்தில் ராகு இருக்கின்ற பொழுது அந்த நபர் தைரியமானவராகவும் துணிச்சலாகவும் தொடர்பு துறை எழுத்து மற்றும் கலை துறையில் பெரிய புகழை பெறக்கூடியவர்களாகவும் இருக்கிறார்கள்.

அதுவே ராகு சூரியனுடன் தொடர்பு கொள்ளும் போது அரசாங்க ரீதியான உதவிகள் மற்றும் உயர் அதிகாரிகள் உடைய தொடர்புகளை பெறுகிறார்கள்.

சந்திரனுடன் ராகு தொடர்பு கொள்ளும் பொழுது கற்பனை திறன் அதிகரிக்கிறது. இருப்பினும் தேவை இல்லாத மனக் குழப்பமும் வருகிறது. செவ்வாயுடன் ராகு சேரும் பொழுது காது மூக்கு சார்ந்த உடல் நல கோளாறுகள் வருகிறது.

புதனுடன் ராகு சேரும் பொழுது சிறந்த எழுத்தாளராக இருக்கிறார்கள். அப்படியாக, மூன்றாம் இடத்தில் ராகு இருப்பதால் வேறு என்ன பிரச்சனைகள் மற்றும் நன்மைகள் கிடைக்கிறது என்பதை பற்றி பல்வேறு தகவல்களை இந்த காணொளியில் பார்த்து நான் தெரிந்து கொள்வோம்.         

 

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US