2025 ராகு கேது பெயர்ச்சி: கஷ்டங்கள் விலக செல்ல வேண்டிய கோயில்கள்
மேஷம்:
இவரக்ளுக்கு ராகு கேது பெயர்ச்சி தொழிலில் நல்ல வெற்றியை கொடுக்கும். சமுதாயத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். மன அமைதி உண்டாகும். இவர்கள் இந்த காலங்களில் துர்கை அம்மன் மற்றும் பத்ரகாளி அம்மன் வழிபாடு செய்யலாம்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் சந்தித்த நெருக்கடிகள் விலகும். இருந்தாலும் கல்வியில் கவனம் செலுத்தவேண்டும். வீண் ஆசைகளை தவிர்ப்பது நல்லது. இந்த காலகட்டங்களில் இவர்கள் விஷ்ணு பகவான், பிள்ளையார் வழிபாடு மேற்கொள்ளலாம்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருந்தாலும் பேச்சில் கவனம் அவசியம். தேவை இல்லாத அலைச்சல் அதிகரிக்கும். இவர்கள் திருச்சி ரங்கநாதரையும், ஆஞ்சிநேயரையும் வழிபாடு செய்யலாம்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு செய்யும் எல்லா செயல்களிலும் கவனம் தேவை. படிப்பில் கவன சிதறல் உண்டாகும். பணவரவு இருந்தாலும் எச்சரிக்கையாக செலவு செய்யவேண்டும். இவர்கள் காலபைரவர், விநாயகர் மற்றும் திருநாகேஸ்வரம் சென்று வழிபாடு செய்யலாம்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு பண வரவு அமோகமாக இருந்தாலும், அலைச்சல் அதிகரிக்கும். நிதானம் தேவை. இந்த காலகட்டத்தில் நரசிம்மர், வாராகி மற்றும் பிள்ளையார் வழிபாடு செய்யலாம்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த நேரத்தில் சரியான தூக்கம் இருக்காது. பண வரவு சிறப்பாக இருக்கும். பிரிந்த உறவுகள் ஒன்று சேருவார்கள். இவர்கள் பெருமாள் வழிபாடும் முன்னோர்கள் வழிபாடும் செய்யலாம்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்கள் இத்தனை நாள் சந்தித்த கஷ்டம் தீரும். நட்பு விஷயங்களில் கவனம் தேவை. குழந்தை பாக்கியம் உண்டாகும். இவர்கள் நரசிம்மர், காலபைரவர் மற்றும் வராஹி வழிபாடு செய்யலாம்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு தொழிலில் ரீதியாக நெருக்கடிகள் உண்டாகும். பணம் தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. இவர்கள் விநாயகர் வழிபாடும் காலபைரவர் வழிபாடும் செய்யலாம்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு அவர்கள் சந்தித்த அவமானம் தீரும். வாழ்க்கையில் ஏற்றத்தை சந்திப்பீர்கள். எடுக்கும் புதிய முயற்சிகள் வெற்றி அடையும். இவர்கள் துர்கை அம்மன் வழிபாடும் சித்தர்கள் வழிபாடும் செய்யலாம்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு பேச்சில் மிகுந்த கவனம் அவசியம். குழந்தை பாக்கியம் உண்டு. இவர்கள் இந்த காலக்கட்டத்தில் குபேர வழிபாடும் ரெங்கநாதர் வழிபாடும் செய்வது சிறப்பாக அமையும்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் சந்தித்த பண கஷ்டங்கள் விலகும். எதிர்பாராத சண்டைகள் உண்டாகும். இவர்கள் திருநாகேஸ்வரம் சென்று வழிபாடு செய்யலாம்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இந்த மருத்தவ செலவு குறையும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். இவர்கள் இந்த காலகட்டத்தில் ஆஞ்சிநேயர் வழிபாட்டையும் முருகன் வழிபாடும் செய்வது சிறந்த பலன் கொடுக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |