உங்கள் ஜாதகத்தில் ராகுவுடன் சேர்ந்த சூரியன் கோடீஸ்வர யோகம் தருவாரா?
ஜோதிடத்தில் பிரம்மாண்டம் மற்றும் நிழல் கிரகமாக கருதக்கூடியவர் ராகு பகவான். இவர் எந்த வீட்டில் இருக்கிறார்? எந்த கிரகத்தோடு இணைந்து இருக்கிறார் அதனைப் பொறுத்த அவருடைய பலன் மாறுகிறது. அப்படியாக, ராகு எந்த கிரகத்தோடு இணைந்திருந்தால் என்ன பலன் என்பதை பற்றி பார்ப்போம்.
1. சூரியன் + ராகு:
சூரியன் ராகு சேர்ந்திருக்கும் போது அந்த நபர் தலைமைத்துவ பண்பில் சிறந்து விளங்குவார்கள். அரசியல் வெற்றி மற்றும் திடீர் பணவரவு கொடுக்கக்கூடிய அமைப்பு உருவாகும். அதே சமயம், அரசு தொடர்பான விஷயங்கள் மற்றும் தந்தையுடன் சில கருத்து வேறுபாடுகளை உருவாக்கும்.
2. சந்திரன் + ராகு:
சந்திரன் மனதை குறிக்க கூடியவர். சந்திரனுடன் ராகு சேரும் பொழுது அந்த நபர் அதிக அளவில் குழப்பத்துடன் இருக்கக்கூடியவராக காணப்படுகிறார். மேலும், இவர்கள் உணவு தொடர்பான தொழில் செய்யும் பொழுது மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும்.
3. செவ்வாய் + ராகு:
செவ்வாய் ராகு சேரும் பொழுது அந்த இடத்தில் மிகுந்த வேகம் மற்றும் ஆக்ரோஷமான குணம் உருவாகக் கூடும். அதனால் அந்த நபர் போலீஸ் மற்றும் காவல் துறை பணிகளில் ஈடுபடுகிறார்கள்.
4. புதன் + ராகு:
இந்த அமைப்பு இவர்களுக்கு காது மற்றும் நரம்பு தொடர்பான பிரச்சனைகள் கொடுக்கிறது. அதே சமயம் ஆராய்ச்சி, படிப்பு, பேச்சாற்றல் போன்றவற்றில் இவர்கள் சிறந்து விளங்குவார்கள்.
5. குரு + ராகு (குரு சண்டாள யோகம்):
இந்த அமைப்பு உள்ளவர்கள் வெளிநாடு சென்று வேலை பார்ப்பது இவர்களுக்கு நிறைய நற்பலன்களை கொடுக்கும்.
6. சுக்கிரன் + ராகு:
இந்த அமைப்பு கொண்டவர்கள் பிராண்ட் பொருட்கள் மற்றும் சுகபோகங்கள் மீது அதிக அளவில் உருவாக்கும். இவர்களுக்கு கலை மற்றும் மீடியா துறையில் மிகவும் சாதகமான பலனை கொடுக்கும்.
7.சனி + ராகு:
இவர்கள் நிறைய சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் உண்டு. கட்டுமான பணிகள் அல்லது பெரிய அளவிலான தொழில் முயற்சிகள் இவர்களுக்கு பல நேரங்களில் நல்ல சிறப்பான பலன்களை கொடுத்து விடும்.
நிறைய நபர் ராகுவை தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ராகு நமக்கு பிரம்மாண்டமான உணர்வை கொடுத்து கேது அதை கட்டுப்படுத்துகிறார் என்றாலும் ராகு நமக்கு ஒரு மிகப்பெரிய விஷயத்தை கற்றுக் கொடுத்து முன்னேற்றி நகர்த்துகிறார்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |