ஜோதிடம்: ராகு கேதுவுடன் எந்த கிரகம் இணைந்து இருந்தால் என்ன பலன்?
ஜோதிடத்தில் 9 கிரகங்களும் மிக மிக முக்கியமானவை. அப்படியாக, அதில் ராகு கேது மட்டும் நிழல் கிரகம் என்று சொல்லுவார்கள். இந்த ராகு கேது ஒருவர் வாழ்க்கையில் பல மாற்றங்களையும் திருப்பங்களையும் கொடுக்கிறது.
ஒருவர் வாழ்க்கையில் ஆசை துறவறம் என்று இரண்டும் இரண்டு எல்லைகளை தொடும் கிரகம் என்பதால், இதன் சேர்க்கை பொறுத்து அந்த ஜாதகரின் குணங்களும் மாறுபடுகிறது. மேலும், ராகுவை போல் கொடுப்பார் இல்லை, கேதுவை போல் கெடுப்பார் இல்லை என்றும் சொல் உண்டு.
அப்படியாக, ஜாதகத்தில் இந்த ராகு கேது எந்த கிரகத்துடன் சேர்கிறதோ அதை பொறுத்து அவர்கள் வாழ்க்கையில் பல மாற்றங்கள் நடக்கிறது. அதே போல் திருமணம் செய்யும் பொழுது இந்த சுக்கிரன், செவ்வாய் இவைகளுடன் ராகு கேது எந்த கட்டத்தில் இணைந்து இருக்கிறது என்று பார்த்து திருமணம் செய்வது நன்மையை கொடுக்கும்.
செவ்வாயுடன் ராகு மற்றும் சுக்கிரனுடன் கேது இருந்தால் திருமணத்தில் சில சிக்கல் உண்டாக வாய்ப்புள்ளது. மேலும், எந்த கிரகங்களுடன் ராகு கேது இருந்தால் என்ன பலன்? அவர்கள் வாழ்க்கை எவ்வாறு அமையும்?
எந்த மாதிரியான சிக்கல்கள் அவர்கள் சந்திப்பார்கள் என்றும், அதே போல் ராகு கேது சேர்க்கை அவர்களுக்கு எந்த விஷயங்களில் மிக பெரிய அதிர்ஷ்டம் கொடுக்கும் என்று பல்வேறு ஜோதிட தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் ஜோதிடர் ஈஸ்வரி அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |