ராகு கேது இந்த கிரகங்களுடன் இணைந்தால் பெரிய பாதிப்பு கொடுக்குமாம்

By Sakthi Raj Aug 07, 2026 01:00 PM GMT
Report

 ஜோதிடத்தில் நிழல் கிரகமாக இருக்கக்கூடிய ராகு மற்றும் கேது பகவான் இவர்கள் இணைந்து மனிதர்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் மாற்றத்தை கொடுக்கிறார்கள்.

மனிதர்களுடைய வாழ்க்கையில் ஒவ்வொரு சோதனைகளையும் அவர்களுக்கு அனுபவமாக மாற்றி கொடுக்க கூடியவர்கள். அப்படியாக ராகு கேது எந்த கிரகங்களோடு இணைந்து இருந்தால் என்ன பலன் என்று பார்ப்போம்.

ராகு கேது இந்த கிரகங்களுடன் இணைந்தால் பெரிய பாதிப்பு கொடுக்குமாம் | Raghu Kethu Conjuction With Sun Moon Prediction

சோதனைகளை சாதனைகளாக மாற்றக்கூடிய ராசிகள் யார் தெரியுமா?

சோதனைகளை சாதனைகளாக மாற்றக்கூடிய ராசிகள் யார் தெரியுமா?

1. சூரியன் ராகு மற்றும் கேது இணைந்து இருந்தால் என்ன பலன்:

இந்த அமைப்பு முதலில் குழந்தை மற்றும் தந்தையின் உறவை குறிக்கக் கூடியதாக இருக்கிறது. இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நேசிக்கவே முடியாத சூழ்நிலையை கொடுத்து விடும்.

தந்தை எவ்வளவு ஆலோசனை கூறினாலும் அதை குழந்தைகள் கட்டுப்படுத்துவதாக நினைத்து தந்தையை வெறுத்து விடுகிறார்கள். நல்ல வருமானம் வந்தாலும் கையில் பணம் தங்குவதில்லை.

ராகு கேது இந்த கிரகங்களுடன் இணைந்தால் பெரிய பாதிப்பு கொடுக்குமாம் | Raghu Kethu Conjuction With Sun Moon Prediction

மன அமைதிக்கான பாதை இதுதான்! கௌதம புத்தரின் அரிய வாழ்வியல் பாடங்கள்

மன அமைதிக்கான பாதை இதுதான்! கௌதம புத்தரின் அரிய வாழ்வியல் பாடங்கள்

2. சந்திரன் ராகு அல்லது கேதுவுடன் தொடர்பு கொண்டால் என்ன பலன்:

இந்த அமைப்பு தாய் மற்றும் மகன் உறவுகளுக்கு இடையே ஒரு முக்கிய பாடமாக மாறிவிடும். தாய் மீது எவ்வளவு அன்பு வைத்திருந்தாலும் அவர்களால் ஒரு அமைதியாகவும் கவலையே இல்லாமல் வாழ முடியாது.

எப்பொழுதும் இவர்களுக்கு தாயின் உடல் நிலையை பற்றி கவலை இருந்து கொண்டே இருக்கும். சிலருக்கு சிறுவயதில் தாயை விட்டு பிரிந்து இருக்கக்கூடிய நிலை வரலாம். மன அழுத்தம் தூக்கமின்மை பிரச்சனை உருவாகும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US