ராகு பெயர்ச்சி: 18 வருடம் கழித்து உருவாகும் விபரீத ராஜ யோகம்- அதிர்ஷ்டம் பெரும் 3 ராசிகள்
ஜோதிடத்தில் நவகிரகங்களில் நிழல் கிரகமாக இருக்க கூடியவர்கள் ராகு கேது. இவர்கள் எப்பொழுதும் பின்னோக்கிய பயணம் தான் செய்வார்கள். இவர்கள் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல சுமார் 18 மாதங்கள் ஆகும். மேலும், ராகு பகவான் தற்பொழுது மீன ராசியில் பயணம் செய்து வருகிறார்.
பிறகு இந்த வருடம் 2025 மே மாதம் ராகு பகவான் மீன ராசியில் இருந்து விலகி கும்ப ராசிக்கு செல்கிறார். கும்ப ராசி சனி பகவானின் சொந்த வீடாகும். இந்த மாற்றம் 12 ராசிகளுக்கும் பல விதமான தாக்கம் கொடுத்தாலும், குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மிக பெரிய ராஜயோகத்தையும் அதிர்ஷ்டத்தையும் கொடுக்க போகிறது. அவை எந்த ராசிகள் என்று பார்ப்போம்.
துலாம்:
துலாம் ராசியில் இருந்து 5ஆம் வீட்டில் ராகு பகவான் பயணம் செய்கிறார். இதனால் துலாம் ராசிக்கு இந்த கால கட்டத்தில் நினைவாற்றல் அதிகரிக்கும். மாணவர்கள் இந்த காலகட்டத்தில் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். திருமண வாழ்க்கை மிக மகிழ்ச்சியாக மாறும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும்.
சிம்மம்:
சிம்ம ராசியில் இருந்து 7வது வீட்டில் ராகு பயணம் செய்கிறார். இதனால் மனதில் ஒரு வகையான தெளிவு பிறக்கும். இந்த நேரத்தில் இவர்களுக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். தொடங்கும் திட்டம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். இருந்தாலும் வேலை செய்யும் இடங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
கன்னி:
கன்னி ராசியில் இருந்து 6வது வீட்டில் இருந்து ராகு பகவான் பயணம் செய்கிறார். அதனால் இவர்களுக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பிரச்சனைகள் சரி ஆகும். குடும்பத்தில் உண்டான சிக்கல்கள் விலகும். மனதில் எதிர்காலம் பற்றிய தெளிவு பிறக்கும். பயணம் வழியாக ஆதாயம் பெறுவீர்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |