ராகு உடன் இணைந்து இருக்கும் கிரகம் நன்மை செய்யுமா அல்லது தீமை செய்யுமா?
ஜோதிடத்தில் நிழல் கிரகமாக இருக்கக்கூடிய ராகு பகவான் இருக்கும் இடத்தை பொறுத்து ஒருவருக்கு நன்மையும் தீமையும் செய்கிறார். அந்த வகையில், இரண்டாம் இடத்தில் ராகு பகவான் இருந்தால் அந்த நபருக்கு நன்மை செய்வாரா? தீமை செய்வாரா என்பதை பற்றி பார்ப்போம்.
இரண்டாம் இடத்தில் ராகு இருப்பது சில நேரங்களில் அவர்களுக்கு அபரிதமான செல்வத்தை வழங்கினாலும் சில நேரங்களில் குடும்ப வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள், திருமண தாமதம், பேச்சு சார்ந்த விஷயங்களில் சிக்கல்களை கொடுத்து விடுகிறது.
அப்படியாக, ராகு பகவான் சூரியனுடன் சேரும்பொழுது அவர்களுக்கு கம்பீரமான மற்றும் அதிகார தோரணையில் பேசக்கூடிய அமைப்பும், மூதாதையர் சொத்துக்கள், அரசு சார்ந்த ஆதாயங்கள் கிடைக்கிறது.

அதேபோல், சந்திரன் மற்றும் ராகுவுடன் சேரும் பொழுது இவர்கள் உணர்ச்சிவசப்பட்டு பேசுவது, குடும்பங்களில் அதிக அளவில் செலவு மற்றும் நீர் விஷயங்களில் அதிக விருப்பம் காட்டுகிறார்கள்.
செவ்வாயுடன் ராகு சேரும்பொழுது இது கடினமான சேர்கையாக இருந்தாலும் வாழ்க்கையில் கடுமையான பேச்சு, பிடிவாதம், வயிறு தொடர்பான உடல்நல பாதிப்புகள் வருகிறது.
புதன் பகவானுடன் ராகு சேரும்பொழுது இவர்களுக்கு விற்பனை துறை, ஆசிரியர் பணி மற்றும் பேச்சுத் திறன் வழியாக ஒரு நல்ல ஆதாயம் கிடைக்கிறது. குரு பகவானுடன் ராகு சேரும்பொழுது குடும்பத்தில் ஏற்படுகின்ற சிக்கல்களை சரி செய்து குடும்ப ஒற்றுமையை பாதுகாக்கிறது.
ஆன்மிக பேச்சாளருக்கு இது ஒரு நல்ல மாற்றமாக இருக்கும். சனி உடன் ராகு சேரும்பொழுது குடும்ப உறுப்பினர்களுடன் நெருக்கம் இல்லாமல் போகுதல், வேலை செய்யும் இடங்களில் பிரச்சனை. வேலை காரணமாக குடும்பத்தை பிரிந்து வாழக்கூடிய நிலை வருகிறது.
மேலும், ராகு பகவானை பற்றி பல்வேறு விஷயங்களை இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.