2026. ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு அதிர்ஷ்டம்.. ராகு கேதுவால் ராஜயோகம் யாருக்கு?

By Sakthi Raj Nov 17, 2026 09:32 AM GMT
Report

ஜோதிட சாஸ்திர நம்பிக்கையின் அடிப்படையில் ராகு மற்றும் கேது கிரகங்கள் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இவர்கள் இடம் மாற்றம் எல்லா ராசிகளுக்கும் மிகப்பெரிய அளவில் மாற்றங்களை உண்டு செய்யும்.

அந்த வகையில், டிசம்பர் 5ஆம் தேதி சனிக்கிழமை மாலை 7.28 மணிக்கு ராகு பெயர்ச்சியும், கேது பெயர்ச்சியும் நடக்க இருக்கிறது. அன்று ராகு பகவான் கும்பத்தில் இருந்து மகரத்திற்கும், கேது பகவான் சிம்ம ராசியிலிருந்து கடக ராசிக்கும் இடம் மாறுகிறார்.

ஜோதிட ரீதியாக ராகு கேதுவின் தாக்கம் ஒரு சில ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் வெற்றி வாய்ப்புகளை தேடி கொடுப்பதாக சொல்லப்படுகிறது. அவர்கள் யார் என்று பார்ப்போம்.

2026. ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு அதிர்ஷ்டம்.. ராகு கேதுவால் ராஜயோகம் யாருக்கு? | Rahu Ketu Peyarchi December 5 2026 Predictions

ஒருமுறை மனம் உடைந்துவிட்டால் அவ்வளவுதான்.. சமாதானம் ஆகாத 4 ராசிகள்..

ஒருமுறை மனம் உடைந்துவிட்டால் அவ்வளவுதான்.. சமாதானம் ஆகாத 4 ராசிகள்..

ரிஷபம் :

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் மிகவும் நேர்மறையான மாற்றங்களை கொண்டு வந்து சேர்க்க போகிறது. இவர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். சிக்கலான பிரச்சனைகளுக்கு வெகு விரைவில் எளிதான தீர்வு காண்பீர்கக்ள்.

நிலுவையில் இருந்த ஒப்பந்தங்கள் இவர்களுக்கு வெற்றிகரமாக அமையும். நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

கன்னி :

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் மிகப்பெரிய அளவில் நன்மைகள் கொண்டு வந்து சேர்க்கப்போகிறது. பொருளாதார நெருக்கடிகள் விலகும். அடுத்த ஒன்றரை காலம் இவர்களுக்கு வருமானம் அதிகரிக்க போகிறது.

இவர்கள் செய்த பெரிய முதலீடுகள் இவர்களுக்கு நல்ல லாபத்தை கொண்டு வந்து சேர்க்கும். நீண்ட நாட்கள் கடன் அடைக்க கூடிய வாய்ப்புகள் உருவாகும். குழந்தைகள் வழியாக மிகப்பெரிய அளவில் நன்மைகளை பெறுவீர்கள்.

Weekly rasi palan: நவம்பர் 15 முதல் 21 வரை..மேஷம் முதல் துலாம் வரை யாருக்கு அதிர்ஷ்டம்?

Weekly rasi palan: நவம்பர் 15 முதல் 21 வரை..மேஷம் முதல் துலாம் வரை யாருக்கு அதிர்ஷ்டம்?

துலாம்:

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு ராகு மற்றும் கேதுவின் இந்த முக்கிய பெயர்ச்சி இவர்களுக்கு மிகப்பெரிய அளவில் சாதகமான பலனை கொண்டு வந்து சேர்க்கப் போகிறாது.

குழந்தைகள் வழியே நல்ல மகிழ்ச்சியான நிலையை பெறுவீர்கள். குடும்ப வாழ்க்கையில் இருவந்த பிரச்சினைகள் விலகி மகிழ்ச்சி வந்து சேர போகிறது. தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்தை பெறுவீர்கள். வேலை செய்யும் இடங்களில் திடீர் முன்னேற்றம் அமையும்.    

Disclaimer:

இது பொதுவான ஜோதிட வழிகாட்டுதல் மட்டுமே. இது மருத்துவ, நிதி, சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனை அல்ல. உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தகுதியான நிபுணரை அணுகுங்கள். ஜோதிடம் ஒரு நம்பிக்கை அடிப்படையிலான வழிகாட்டுதல் மட்டுமே எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உத்தரவாதம் இல்லை. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US