ராகு கேது பெயர்ச்சி 2025 - இந்த ராசிகளுக்கு காதல் உறவு கல்யாணமாக மாறும்!
ராகு கேது பெயர்ச்சியினால் 5 ராசிக்காரர்களுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.
சர்ப்ப கிரகங்களான ராகு - கேது மே மாதம் 18ம் தேதி மாலை 4.30 மணிக்கு பெயர்ச்சியாக உள்ளனர். ராகு மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கும், கேது கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கும் மாற உள்ளனர். இதனால் அதிர்ஷ்டம் பெறக்கூடிய ராசிகளை தெரிந்து கொள்வோம்.
மேஷம்
தொழிலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் மரியாதையையும், மேலதிகாரிகளின் ஆதரவையும் பெறுவீர்கள்.
மிதுனம்
நோய்களிலிருந்தும் நிவாரணம் பெறலாம். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். எல்லாத் துறைகளிலும் வெற்றி பெறுவார்கள். தைரியமும் மன உறுதியும் அதிகரிக்கும். உங்கள் எதிரிகளை வெல்வீர்கள்.
கடகம்
வேலை, தொழிலில் புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள். பண விஷயத்தில் சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வு பெற வாய்ப்புள்ளது.
கன்னி
நோய்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி வேலை செய்பவர்களுக்கு நல்ல காலம் இருக்கும். நிதி நிலை மேம்படும்.
துலாம்
ஆரோக்கியம் மேம்படும். வருமானமும் நன்றாக இருக்கும். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். தடைபட்ட காரியங்கள் அனைத்திலும் முன்னேற்றத்தை காண்பீர்கள். வாழ்க்கையில் சந்தோஷம் நிலைத்திருக்கும். வேலையில் பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கான வாய்ப்புகள் உண்டு. காதல் உறவு திருமணமாக மாறும்.