2026 ராகு கேது பெயர்ச்சி: தாய் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய துலாம் ராசியினர்
2026 ஆம் ஆண்டு ராகு கேது பெயர்ச்சி டிசம்பர் 5ஆம் தேதி நடக்க இருக்கிறது அந்த வகைகயில், இந்த பெயர்ச்சி துலாம் ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்ப்போம். இவர்களுக்கு நான்காம் இடத்தில் ராகு இருப்பதால் இவர்களுடைய தாய் உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும்.
சொத்துக்கள் வாங்கும் பொழுது சட்ட ரீதியாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். மேலும், இதனால் இவர்களுக்கு ஒரு மன குழப்பம் ஏற்படலாம். பத்தாம் இடத்தில் கேது வருவதால் இது தொழில் வளர்ச்சி புதிய தொழில் தொடங்குதல் மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு மிகவும் சாதகமான காலகட்டமாகும்.
ஒரு சிலருக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு கோவில் திருப்பணிகளில் ஆர்வம் அதிகரிக்க கூடிய காலகட்டம். கணவன் மனைவி இடையே அல்லது காதலர்களிடையே துவக்கத்தில் சிறு சிறு சந்தேகங்கள் இருந்தாலும் அவை காலப்போக்கில் நல்ல புரிதலும் ஒருவரை ஒருவர் ஆதரவு கொடுக்கும்படியாக அமையப்போகிறது.

மேலும், மாணவர்கள் ஆரோக்கியத்தில் சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இவர்கள் மின்னணு சாதனங்களில் அதிக அளவில் நேரம் செலுத்துவதை குறைத்துக் கொள்வது நல்லது. மேலும், புதிய தொழில் தொடங்குவதற்கும் இவர்கள் நல்ல வழிகாட்டுதல்களை பெறுவதற்கும் உகந்த காலகட்டமாக இருக்கிறது.
இந்த காலகட்டங்களில் தரமான மனிதர்களுடன் பழகுவதும் நேர்மறையான சூழலை உருவாக்கிக் கொள்வதும் இவர்களுக்கு மிகவும் முக்கியம். முடிந்தால் புதன்கிழமை தோறும் பெருமாள் ஆலயத்திற்கு சென்ற விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது கேட்பது ஒரு சிறந்த பலனை பெற்றுக் கொடுக்கும்.
மேலும், துலாம் ராசிக்கு இந்த காலகட்டம் எப்படி இருக்க போகிறது என்று இந்த காணொளியை பார்த்து தெரிந்து கொள்வோம்.
Disclaimer:
இது பொதுவான ஜோதிட வழிகாட்டுதல் மட்டுமே. இது மருத்துவ, நிதி, சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனை அல்ல. உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தகுதியான நிபுணரை அணுகுங்கள். ஜோதிடம் ஒரு நம்பிக்கை அடிப்படையிலான வழிகாட்டுதல் மட்டுமே எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உத்தரவாதம் இல்லை.