ராகுவின் நட்சத்திர மாற்றம் : தொழிலில் அபார முன்னேற்றமடைய போகும் 3 ராசிகள்!

By Vinoja Jun 30, 2026 04:28 PM GMT
Report

ஜோதிடத்தில் நவகிரகங்களின் பெயர்ச்சி 12 ராசிகளின் வாழ்க்கையில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.

அந்த வகையில், சுமார் 18 மாதங்கள் ஒரு ராசியில் பயணிக்கும் ராகு, (ஜூன் 30) இன்று முதல் கும்ப ராசியில் அவிட்டம் நட்சத்திரத்தில் நுழைந்து டிசம்பர் வரை அங்கேயே இருப்பார்.

ராகுவின் நட்சத்திர மாற்றம் : தொழிலில் அபார முன்னேற்றமடைய போகும் 3 ராசிகள்! | Rahu Transit In Avittam Which Zodiac Get Luck

இந்த நட்சத்திரப் பெயர்ச்சி தொழில், நிதி, வியாபாரம், கல்வி உள்ளிட்ட பல துறைகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் என கணிக்கபபட்டுள்ளது.

குறித்த  ராகு நட்சத்திர பெயர்ச்சி சில ராசிகளுக்கு சவால்களைத் தந்தாலும், சிலருக்கு வளர்ச்சி, லாபம் மற்றும் புதிய வாய்ப்புகளை வழங்கும். குறிப்பாக தொழில் முன்னேற்றம் மற்றும் வருமான உயர்வு பெறவுள்ள ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

மேஷம்

ராகுவின் நட்சத்திர மாற்றம் : தொழிலில் அபார முன்னேற்றமடைய போகும் 3 ராசிகள்! | Rahu Transit In Avittam Which Zodiac Get Luck

ராகுவின் இந்தப் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு நிதி முன்னேற்றத்தை அளிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் நிறைவேறும்.

புதிய வருமான வாய்ப்புகள் உருவாகி, கடின உழைப்புக்கு உரிய பலன் கிடைக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவும், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். போட்டித் தேர்வுக்கு தயாராகுபவர்களுக்கும் சாதகமான காலமாக இருக்கும்.

சிம்மம்

ராகுவின் நட்சத்திர மாற்றம் : தொழிலில் அபார முன்னேற்றமடைய போகும் 3 ராசிகள்! | Rahu Transit In Avittam Which Zodiac Get Luck

சிம்ம ராசிக்காரர்களுக்கு நிதி நிலை வலுப்பெறும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.

குடும்பத்தில் மகிழ்ச்சியும் மனநிம்மதியும் அதிகரிக்கும். முதலீடுகள் லாபம் தரும்; நீண்ட நாள் குடும்பப் பிரச்சனைகளுக்கு விடிவு காலம் உண்டாகும்.

துலாம்

ராகுவின் நட்சத்திர மாற்றம் : தொழிலில் அபார முன்னேற்றமடைய போகும் 3 ராசிகள்! | Rahu Transit In Avittam Which Zodiac Get Luck

துலாம் ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் சாதகமான மாற்றங்கள் காத்திருக்கின்றன. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

நீண்ட தூரப் பயணங்கள் நிதி ஆதாயத்தைத் தரும். புதிய நட்புகள் எதிர்காலத்தில் பயனளிக்கும். வேலை மாற்றம் குறித்து யோசிப்பவர்களுக்கு இது சிறந்த காலமாக அமையும். நிதி நிலையில் நல்ல ஏற்றம் உண்டாகும். 

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US