திருமணத்தின் பொழுது மழை பெய்வது நல்ல சகுனமா?

By Sakthi Raj Sep 23, 2026 01:00 PM GMT
Report

இந்த உலகத்தில் நீர் என்பது மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது. உலகில் வாழக்கூடிய எல்லா ஜீவராசிகளுக்கும் இந்த நீர் மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில், ஒருவர் திருமணத்தின் பொழுது மழை பெய்வது நல்ல சகுனமா என்பதை பற்றி பார்ப்போம்.

பொதுவாகவே, நாம் எந்த ஒரு சுப காரியங்களை தொடங்கும்பொழுது சகுனம் பார்த்து துவங்குவது இயல்பான ஒன்று. திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்று சொல்வார்கள்.

அன்றைய காலங்களில் திருமணம் என்பது பிரம்ம முகூர்த்தமான நேரங்களில் மட்டுமே நடத்தப்பட்டது. இன்றைய காலகட்டங்களில் இரவிலும் திருமணம் நடைபெறுகிறது.

திருமணத்தின் பொழுது மழை பெய்வது நல்ல சகுனமா? | Rain On Wedding Day Is It A Good Sign

ஆன்மீகம்: தேங்காய் உடைக்கும் பொழுது இந்த விஷயங்களை கவனிக்க தவறாதீர்கள்

ஆன்மீகம்: தேங்காய் உடைக்கும் பொழுது இந்த விஷயங்களை கவனிக்க தவறாதீர்கள்

அப்படியாக, திருமணத்தின் பொழுது மழை பெய்வது என்பது எப்படிப்பட்ட ஒரு சகுனம் என்ற ஒரு குழப்பம் எல்லோருக்கும் இருக்கலாம். மழை என்பது இயற்கையான நிகழ்வாகும். மழை பெய்கின்ற பொழுது எல்லோருக்கும் மனதில் ஒருவகையான மகிழ்ச்சியை கொடுக்க கொடுக்கிறது.

வறண்ட பூமிக்கு நீர் கிடைத்து பயிர் உயிர்ப்பிக்கிறது. அந்த வகையில், திருமண நாள் அன்று மழை பெய்வது என்பது மணமக்களின் அதிர்ஷ்டமாகவே பார்க்கப்படுகிறது.

திருமணத்தின் பொழுது மழை பெய்வது நல்ல சகுனமா? | Rain On Wedding Day Is It A Good Sign

மழை பெய்து முடிந்ததும் ஒரு புதிய தொடக்கத்திற்கான வழி கிடைத்துவிட்டது என்பதை அர்த்தமாகும்.

ஆகையால், திருமண நாளில் மழை பெய்கின்ற பொழுது திருமணம் முடிந்த புதிய தம்பதிகள் அவர்களுடைய வாழ்க்கையில் தெளிவான மனநிலையுடன் இருப்பார்கள் என்ற பொருளாகும். ஆதலால், இது நல்ல சகுனமே தம்பதிகள் மென்மேலும் வளர்ச்சி அடையவும் மகிழ்ச்சிக்கு குறைவில்லாமல் வாழ்வார்கள் என்பதையும் உணர்த்தக் கூடியதாக இந்த மழை இருக்கிறது. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US