எந்த ராசிகளுக்கு ஏழரை சனி, அஷ்டம சனி, ஜென்ம சனி, கண்ட சனி நடக்கிறது தெரியுமா?
சனிபகவான் என்றாலே முதலில் நமக்கு நினைவிற்கு வருவது பயம் மட்டுமே. அந்த வகையில், அவருடைய காலகட்டமாக இருக்கக்கூடிய ஏழரை சனி, அஷ்டம சனி, ஜென்ம சனி, கண்ட சனி ஆகிய காலங்கள் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் எந்த ராசிகளுக்கு தற்போது சனி பகவானால் நடக்கக்கூடிய இந்த காலகட்டங்கள் என்று பார்ப்போம்.
ஏழரை சனி:
ஒருவருடைய சந்திர ராசிக்கு முந்தைய ராசி மற்றும் சந்திர ராசி மற்றும் அதற்கு அடுத்த ராசி ஆகிய மூன்று ராசிகளில் சனி சஞ்சரிக்க கூடிய காலமே ஏழரை சனி என்று ஜோதிடத்தில் சொல்லப்படுகிறது. இந்த மூன்று ராசிகளிலும் குறிப்பிட்ட காலம் சஞ்சரிப்பதால் இதனை நாம் ஏழரை ஆண்டுகளாக கருதப்படுகிறது.
தற்பொழுது சனி சஞ்சாரத்தின் அடிப்படையில் கும்பம், மீனம் மற்றும் மேஷ ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலமாக இருக்கிறது என்று ஜோதிட கணிப்புகள் சொல்கிறது.

கும்ப ராசி:
ஏழரை சனியின் இறுதி கட்டம் கும்ப ராசிக்காரர்களுக்கு சனி இரண்டாம் இடத்தில் இருப்பதால் இவர்களுக்கு அது இறுதி கட்ட கட்டம் என்று குறிப்பிடப்படுகிறது. மீன ராசி ஜென்ம சனியின் இரண்டாம் கட்டம் இவர்களுக்கு சந்திர ராசியிலேயே சனி சஞ்சரிப்பதால் இது ஜென்ம சனி என்று ஜோதிடத்தில் குறிப்பிடப்படுகிறது.
மேஷ ராசி:
ஏழரை சனியின் தொடக்கம் மேஷ ராசிக்காரர்களுக்கு சனி பனிரெண்டாம் இடத்தில் சஞ்சரிப்பதாக கணிக்கப்பட்டுள்ளதால் ஏழரை சிறையில் தொடக்கம் என்று குறிப்பிடப்படுகிறது.

அஷ்டம சனி:
சந்திரன் நின்று இருக்கக்கூடிய ராசியில் இருந்து எட்டாம் இடத்தில் சனி சஞ்சரிக்க கூடிய காலமே அஷ்டம சனி என்று ஜோதிடத்தில் குறிப்பிடப்படுகிறது. தற்போதைய நிலைப்படி சிம்ம ராசிக்காரர்களுக்கு சனி எட்டாம் இடத்தில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கண்டக சனி:
சந்திரன் இருக்கும் ராசிக்கு நான்காம் மற்றும் ஏழாம் அல்லது பத்தாம் இடங்களை சந்திக்கும் காலம் கண்டக சனி என்று கூறப்படுகிறது. இப்போது மிதுனம், கன்னி, மற்றும் தனுசு ராசிக்காரர்களுக்கு கண்டக சனி காலத்துடன் தொடர்பு உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இவ்வாறான காலகட்டங்களில் பயம் தேவையில்லை. நேர்மையாகவும் நியாயமற்ற செயல்களுக்கு துணை போகாமல் இருந்தாலே போதுமானது. முடிந்தவரை முடிந்த உதவியை செய்ய முயற்சி செய்யுங்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |