சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது ஏன்? இதனால் கிடைக்கக்கூடிய அற்புத பலன்கள் என்ன?

By Sakthi Raj Sep 23, 2026 09:08 AM GMT
Report

 நம்முடைய ஆணவத்தையும் அகங்காரத்தையும் பாவங்களையும் அடியோடு அழிக்க கூடியவர் சிவபெருமான். அந்த வகையில், சிவலிங்கத்திற்கு நாம் அபிஷேகம் செய்து வழிபாடு செய்வது என்பது நமக்கு மிகப்பெரிய அளவில் பலன்களை கொடுக்கும்.

அபிஷேகம் செய்வது என்பது வெறும் சடங்கு மட்டுமல்ல இது சைவ மரபில் அபிஷேகம் என்பது இறைவனுடன் நாம் பக்தியையும் சரணாகதியையும் வெளிப்படுத்தக்கூடிய ஒரு முக்கியமான வழிபாட்டு முறையாக கருதப்படுகிறது.

சிவபெருமானை அபிஷேகப் பிரியர் என்று சொல்வது உண்டு. அந்த வகையில் சிவலிங்கத்திற்கு நாம் பால், நீர், தயிர், தேன் போன்ற பொருட்களை முறையாக அர்ப்பணித்து அபிஷேகம் செய்வது வழக்கம். இது ஒவ்வொரு கோவில்களில் இருக்கக்கூடிய ஆகம மற்றும் மரபுகளுக்கு ஏற்ப அபிஷேகம் முறைகள் மாறுபடலாம்.

சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது ஏன்? இதனால் கிடைக்கக்கூடிய அற்புத பலன்கள் என்ன? | Shiva Lingam Abhishekam Benefits And Importance

ஆன்மீகம்: தேங்காய் உடைக்கும் பொழுது இந்த விஷயங்களை கவனிக்க தவறாதீர்கள்

ஆன்மீகம்: தேங்காய் உடைக்கும் பொழுது இந்த விஷயங்களை கவனிக்க தவறாதீர்கள்

மேலும், சிவலிங்கத்திற்கு நாம் அபிஷேகம் செய்கின்ற பொழுது அந்த சிவலிங்கத்தின் மீது விழும் நீர் அல்லது பால் அங்கு ஒலிக்க கூடிய மந்திரம் கோயில் மணி சத்தம் தீபத்தின் ஒளி ஆகியவை சேர்ந்து நமக்கு ஒரு அமைதியான வழிபாட்டு சூழலை உருவாக்கி கொடுக்கிறது.

எப்பொழுதுமே இறைவனுக்கு நாம் படைக்கக்கூடிய பொருளின் மதிப்பை விடவும் அங்கு நாம் அர்ப்பணிக்க கூடிய உணர்வின் வெளிப்பாடு இறைவனை நோக்கி நம்மை நெருக்கமாக நகர்த்திக் கொண்டு செல்கிறது.

நம்முடைய உள்ளத்தையும் மனதையும் தூய்மைப்படுத்தக் கூடியதாகவே இந்த அபிஷேகம் இருக்கிறது. அபிஷேகம் சிவலிங்கத்தின் மீது நடைபெறுகின்ற பொழுது நம் மனதில் ஒரு ஆழமான சிந்தனையை அவை உருவாக்குகிறது.

சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது ஏன்? இதனால் கிடைக்கக்கூடிய அற்புத பலன்கள் என்ன? | Shiva Lingam Abhishekam Benefits And Importance

இந்த தேதிகளில் நாம் மறந்தும் திருமணம் செய்யக்கூடாதாம்.. ஏன் தெரியுமா

இந்த தேதிகளில் நாம் மறந்தும் திருமணம் செய்யக்கூடாதாம்.. ஏன் தெரியுமா

அதாவது இறைவன் மீது அபிஷேகம் செய்கின்ற பொழுது நம்முடைய மனதில் இருக்கக்கூடிய ஆணவம், அகந்தை, பொறாமை இவை எல்லாம் அவை தூய்மைப்படுத்த கூடியதாகவே பார்க்கப்படுகிறது.

இறைவனிடம் நம்மை ஒப்படைத்து மனதில் அழுக்கில்லாத குழந்தைகளாக வாழ வேண்டும் என்பதை இவை நமக்கு உணர்த்துகிறது. மேலும், பிரதோஷ தினத்தன்று சிவபெருமான் ஆலயங்களில் நடக்கக்கூடிய அபிஷேகங்களில் கலந்து கொள்ளும் பொழுது நமக்கு வாழ்க்கையில் சந்திக்கக்கூடிய பெரிய பாவங்கள் யாவும் விலகும். நினைத்த காரியம் கைகூடிவரும்.     

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US