2026: கடக ராசிக்கு அக்டோபர் மாதம் திடீர் திருப்பம் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் காத்திருக்கிறது
2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கடக ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்ப்போம். அக்டோபர் மாதம் கடக ராசிக்கு மிகவும் சாதகமான வாய்ப்புகளும் திருப்பங்களும் மட்டுமே காத்திருக்கிறது.
இந்த காலகட்டங்களில் செவ்வாய் பகவான் குருவுடன் சேர்ந்து நீசபங்கம் பெறுவதால் பூமி அல்லது நிலம் தொடர்பான லாபங்கள் இவர்களுக்கு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதால் பணவரவு அதிகரிக்கப்படுகிறது.
மேலும், ஒரு சில நேரங்களில் பணம் சொத்துக்கள் ஆகியவை பிற வடிவங்களாகவும் இவர்கள் பெறக்கூடிய காலமாக உள்ளது.
அதோடு, நான்காம் இடத்தில் புதன் பகவான் இருப்பதால் இவர்களுக்கு புதாதித்திய யோகம், தொழிலில் எதிர்பாராத லாபங்களையும் அரசு வேலைகளுக்கான தேர்வு எழுதக்கூடிய ஒரு பொற்காலமாகவும் அமைகிறது.
இரண்டாம் இடத்தில் கேது இருப்பதால் வாழ்க்கை துணையுடன் பழகும் பொழுது மட்டும் சற்று நிதானமாக அமைதியாக தேவை இல்லாத வாக்குவாதங்கள் செய்யாமல் கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது.
இவர்கள் இந்த மாதம் மன அமைதிக்கும் நல்ல பலன்களுக்கும் முருகப்பெருமானை வழிபாடு செய்வது மிகச்சிறந்தது. குறிப்பாக திருச்செந்தூர் சென்று வருவது இவர்களுக்கு கூடுதல் நன்மைகளை பெற்றுக்கொடுக்கும்.
அக்டோபர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் இவர்கள் எந்த ஒரு வாக்குவாதமும் தேவை இல்லாத பிரச்சனைகளிலும் ஈடுபடாமல் அமைதியாக இருப்பதை சிறந்த பலன்களை பெற்றுக் கொடுக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |