தஞ்சை பெரிய கோவிலில் ராஜராஜ சோழன் சதய விழா சிறப்பு அபிஷேகம்

By Yashini Nov 11, 2024 10:59 AM GMT
Report

தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த நாள் மற்றும் முடி சூட்டிய நாள், ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அவ்வகையில் 1039-வது சதய விழா இரண்டு நாட்கள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.

நேற்று முன்தினம் மங்கள இசையுடன் விழா தொடங்கி கருத்தரங்கம், பரதநாட்டியம், கவியரங்கம் உள்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

தஞ்சை பெரிய கோவிலில் ராஜராஜ சோழன் சதய விழா சிறப்பு அபிஷேகம் | Rajaraja Cholan Sadhaya Vizha Special Abhishekam

இரண்டாம் நாளான நேற்று காலை தேவாரம், திருவாசகம் அடங்கிய திருமுறை நூலுக்கு ஓதுவார்கள் சிறப்பு பூஜைகள் செய்து, யானை மீது வைத்து ராஜவீதிகளில் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

பின்னர் பெருவுடையார்- பெரியநாயகி அம்மனுக்கு 39 வகையான அபிஷேகம் நடந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

முன்னதாக குஜராத்தில் இருந்து மீட்டு கொண்டுவரப்பட்ட ராஜராஜசோழன்- லோகமாதேவி சிலைகள் முன்பு புனித நீர் அடங்கிய குடங்கள் வைத்து சிவாச்சாரியார்கள் சிறப்பு யாகம் செய்தனர்.  

தஞ்சை பெரிய கோவிலில் ராஜராஜ சோழன் சதய விழா சிறப்பு அபிஷேகம் | Rajaraja Cholan Sadhaya Vizha Special Abhishekam

அப்போது ராஜராஜசோழன், லோகமாதேவி சிலைக்கு ராஜா, ராணி அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

இரவு ராஜராஜசோழன் மற்றும் லோகமாதேவிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா நடைபெற்றது.

மேலும் பெருவுடையார்-பெரியநாயகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி ரிஷப வாகனத்தில் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US