2025 ரக்ஷா பந்தன்: அன்று இந்த 6 ராசிகள் மிகவும் கவனமாக இருக்கவேண்டுமாம்
அண்ணன் தங்கை உறவை போற்றும் விதமாக ஒவ்வொரு வருடமும் ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது. அப்படியாக, இந்த 2025ஆம் ஆண்டு ரக்ஷா பந்தன் ஆகஸ்ட் மாதம் 09 ஆம் தேதி வருகின்றது.
மேலும், இந்த வருடம் ஜோதிடத்தில் சில கிரக மாற்றங்கள் பலருக்கும் சாதகமான நிலையில் இல்லாமல் இருப்பதால், ஒரு சிலர் தங்கள் குடும்ப வாழ்க்கையிலும் தொழில் வாழ்க்கையிலும் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றார்கள்.
அந்த வகையில் 2025 ரக்ஷா பந்தன் சிறப்பான நாளாகவும் சந்தோஷமான நாளாகவும் அமைய குறிப்பிட்ட இந்த 6 ராசிகள் கட்டாயம் சில பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்கிறார்கள். அதைப் பற்றி பார்ப்போம்.
மேஷம்:
மேஷ ராசிக்கு ரக்ஷா பந்தன் நாளில் தேவை இல்லாத கோபம் உருவாக வாய்ப்புகள் உள்ளது. அதனால் குடும்பத்துடனும் உடன் பிறந்தவர்களுடனும் கருத்து வேறுபாடுகள் வராமல் பார்த்துக் கொள்வது அவசியம்.
பரிகாரங்கள்:
இவர்கள் அன்றைய தினமும் ஹனுமனுக்கு சிவப்பு நிற பூக்கள் சமர்ப்பித்து வழிபாடு செய்தால் தடைகள் விலகும். அதோடு, அன்று சகோதர்களுக்கு சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்தில் ராக்கி கட்டுவது உறவை பலப்படுத்தும்.
மிதுனம்:
மிதுன ராசிக்கு அன்றைய நாளில் ராகுவின் தாக்கத்தால் மனதில் தேவை இல்லாத குழப்பங்கள் உருவாகலாம். உங்களை குடும்ப நபர்கள் தவறாக புரிந்துக் கொண்டு செயல் பட நிறைய வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற சில சிக்கல்கள் உண்டாகும்.
பரிகாரங்கள்:
அன்றைய நாள் இனிமையாக அமைய 108 முறை ஓம் நமச்சிவாய என்ற மந்திரத்தை பாராயணம் செய்வது நன்மை தரும். அதோடு நீங்கள் மஞ்சள் நிற ராக்கி கட்டிக்கொள்வது சிக்கலைகளில் இருந்து பாதுகாக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்கு இந்த காலகட்டத்தில் தங்கள் ஆளுமையை உறவுகளிடம் காண்பிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகம் இருக்கும். அதனால், குடும்பத்தில் சில சலனம் உண்டாகலாம். அதோடு ராகுவின் தாக்கம் இவர்களுக்கு தொழில் வாழ்க்கையிலும் சில சிக்கல்கள் உருவாகலாம்.
பரிகாரங்கள்:
ரக்ஷா பந்தன் அன்று காலையில் இவர்கள் சூரிய பகவானுக்கு தண்ணீரில் மஞ்சள் கலந்து சமர்ப்பித்து வழிபாடு செய்தால் கிரக பாதிப்புகள் குறையும். இவர்கள் உடன் பிறந்தவர்களுக்கு தங்க நிற ராக்கியை பரிசு அளிப்பது நல்ல அதிர்வலைகளை உருவாக்கும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்கு கடந்த கால பிரச்சனைகளால் மீண்டும் சில சிக்கலை சந்திக்க நேரலாம். இதனால் குடும்பத்தில் தேவை இல்லாத குழப்பங்களும், நிம்மதியின்மையும் உருவாகும்.
பரிகாரங்கள்:
இவர்கள் அன்றைய நாளில் சிவப்பு அல்லது கருப்பு நிற ராக்கி கட்டுவது பாதுகாப்பாக அமையும். சனிபகவானை விளக்கு ஏற்றி வழிபாடு செய்து வந்தால் நன்மை உண்டாகும்.
கும்பம்:
கும்ப ராசிக்கு தொழில் வாழ்க்கையில் எதிர்பாராத தடைகளை சந்திக்கக்கூடும். உடன் பிறந்தவர்களுடன் தேவை இல்லாத கருத்து வேறுபாடுகளை தவிர்க்க வேண்டும்.
பரிகாரங்கள்:
இவர்கள் நீல நிற ராக்கி கட்டுவதும் பரிசளிப்பதும் மன குழப்பங்களை போக்கும். அதோடு, அவர்கள் அன்றைய தினம் சனி பகவானின் மந்திரங்கள் சொல்லி வழிபாடு செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
மீனம்:
மீன ராசிக்கு குடும்பத்தில் தேவையற்ற பேச்சுக்களால் குழப்பங்கள் உருவாகும். அதனால், இறைவழிபாடும் மனதை அமைதியாக வைத்திருப்பதும் இவர்களை சிக்கல்களில் இருந்து பாதுகாக்கும்.
பரிகாரங்கள்:
இவர்கள் வெள்ளை நிறத்தில் ராக்கி கட்டிக்கொள்வதும் அதை பரிசளிப்பதும் அமைதியை கொடுக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







