Rama Navami: வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி ராமர் கோயில்
ஏப்ரல் 17ம் திகதி(நாளை) இந்தியா முழுவதும் ராம நவமி கொண்டாடப்படுகிறது.
அயோத்தி மன்னான தசரதன் புத்திர காமேஷ்டி யாகம் நடத்தி, நான்கு மைந்தர்களை பெற்றெடுத்தார்.
முதல் மைந்தரான ஸ்ரீ ராமன் நவமி திதியில் அவதரித்தார், இந்நாள் ராம நவமி திருநாளாக கொண்டாடப்படுகிறது.
அன்றைய நாளில் அதிகாலை எழுந்து நீராடி, ஸ்ரீ ராமருக்கு பூஜை செய்து நைவேத்தியங்கள் படைத்து வழிபட நன்மைகள் உண்டாகும்.
விழாக்கோலம் பூண்ட அயோத்தி
ராம நவமியை கொண்டாட அயோத்தியில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது, நாளை அதிகாலை 3.30 மணிமுதல் இரவு 11 மணிவரை அதாவது 19 மணிநேரம் கோயில் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிறப்பு தரிசன முறை ரத்து செய்யப்பட்டு பொது தரிசனம் வழியாக மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அயோத்தி ராமர் கோயில் தலைமை பூசாரி ஆச்சார்யா சத்யேந்திரா தாஸ் கூறுகையில், ராமர் சிலை பிரதிஷ்டைக்கு பின்னர் வருகிற முதல் ராம நவமி என்பதால் விழா ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அயோத்தி நகரம் முழுவதுமே 100 எல்இடி திரைகள் அமைக்கப்பட்டு பூஜைகள் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீராமருக்கு உகந்த நைவேத்தியம்
ஸ்ரீராமர் மிக எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தவர் என்பதால், ராம நவமி நாளில் நீர் மோர் படைப்பது சிறந்த நைவேத்தியம் ஆகும், அத்துடன் பானகமும் நைவேத்தியமாக படைக்கப்படுகிறது.
காலையில் வெண் பொங்கல், பருப்பு வடை செய்து பிரசாதமாக சாப்பிடுவார்கள், ராமர் பட்டாபிஷேக படத்தின் முன்பாக வாழைப்பழம், பால் போன்றவற்றை படைக்கலாம்.
இந்நாளில் விசிறி, செருப்பு, குடை போன்ற பொருட்களை தானமாக வழங்கலாம்.
ராமர் பற்றிய நூல்களை படித்தும், ஸ்ரீராம நாமம் சொல்லி இறைவனை வழிபட்டும் அருளை பெறலாம்.