தன்னை தானே வணங்க சென்ற ராமன்! அயோத்தியில் நடந்த அதிசயம்

Rama Navami
By Sakthi Raj Apr 17, 2024 05:45 AM GMT
Sakthi Raj

Sakthi Raj

Report

ராமர் என்றாலே அவருடன் சேர்ந்து சீதை பிராட்டி,ஆஞ்சிநேயர் இவர்கள் தான் நம் மனதில் தோன்றிவிடுவார்கள்.ராமன் பெயருக்கு ஏற்ப அழகன்.

மேலும் சீதை பிராட்டிக்கு (விசாலாட்சி அகன்ற கண்கள் உடையவள் ) என்று அழகிய பெயரும் உண்டு.

அந்த பெயர் பிறந்த சுவாரசிய கதை ஒன்று இருக்கிறது. அதை பற்றி பார்ப்போம்.

தன்னை தானே வணங்க சென்ற ராமன்! அயோத்தியில் நடந்த அதிசயம் | Rama Navami Magavishnu Ayothi

அதாவது ராமரும் சீதையும் பட்டாபிஷேகத்திற்கு முதல் நாள் ரெங்கநாதரை தரிச்சிக்க சென்றனர்.

அதவாது தன்னை தானே தரிச்சிக்க செல்கிறார் ராமர். அர்ச்சகரும் அவரே அர்ச்சிப்பவரும் அவரே என்ற தெய்வீக நிலை.

பதினாறு பெற்று பெருவாழ்வு வாழ ராம நாமம்

பதினாறு பெற்று பெருவாழ்வு வாழ ராம நாமம்


ரெங்கநாதன் மனிதனாக பிறந்து இப்படி ஒரு தெய்வீக நாடகத்தை நடத்துகிறார். ராமர் இப்படி தன்னை தானே வணங்கும் இந்த அற்புத காட்சியை பார்க்கும் பாக்கியம் யாருக்கும் கிடைக்காது.

அந்த பாக்கியம் தனக்கு கிடைத்து இருக்கிறது என்று எண்ணி சீதை கண் இமைக்காமல் தாமரை கண்களால் ராமனை பார்த்து கொண்டு நின்றாள். இதனால் தான் சீதைக்கு விசாலாட்சி என்ற பெயர் பிறந்தது என்று சொல்கிறார் வால்மீகி.

தன்னை தானே வணங்க சென்ற ராமன்! அயோத்தியில் நடந்த அதிசயம் | Rama Navami Magavishnu Ayothi

 மேலும் ,ராம பிரான் பிறரை சந்தோஷபடுத்தி பார்க்கும் நல்ல மனிதர். நாம் ஒரு பொருளை ஒருவருடன் கேட்டால் அவர் இல்லை என்றோ மற்றவர்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள் என்று பதில் சொல்லுவார்கள்.

ஆனால், ராமபிரான் எத்தனை சிறந்த மனிதன் என்றால் ராமரிடம் ஒருவர் ஒரு பொருளை கேட்க அதை இரண்டாக கொடுப்பார் என்கிறார் கிருபானந்த வாரியார்.

தன்னை தானே வணங்க சென்ற ராமன்! அயோத்தியில் நடந்த அதிசயம் | Rama Navami Magavishnu Ayothi

அதாவது ஒரு முறை கிஷ்கிந்தை மன்னரான வாலியின் தம்பி நாட்டையும்,ராவணனின் தம்பியாகிய விபீடணன் அருளையும் ராம பிரானிடம் கேட்டனர்.

அவர்கள் விரும்பியபடியே விபீடனுக்கு அவர் கேட்ட அருளையும் நாட்டையும் கொடுத்தார்.பிறகு அதே போல் சுக்கிரீவனுக்கு நாடு மற்றும் அருளை வழங்கினார்.

ஆகையால் நாமும் ராம பிரானை போல் கொடுத்து வாழ பழகி கொள்ளவேண்டும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
+91 44 6634 5005
Direct
+91 96001 16444
Mobile
bakthi@ibctamil.com
Email US