பதினாறு பெற்று பெருவாழ்வு வாழ ராம நாமம்
மகாவிஷ்ணுவின் ஒரு அவதாரம் தான் ராம பிரான்.அழகு குணம் வீரம் என அனைத்திலும் சிறந்தவன் ராமன். ஒருவர் ராமனை வணங்க தொடங்கிய நாளில் இருந்தே அவர்களுக்கு நிச்சயம் வாழ்வில் வெற்றி மட்டுமே உண்டாகும்.
அத்தனை மகிமை கொண்டவர் ராம பிரான், மேலும் எவர் ஒருவர் ராம நாமத்தை கேட்கிறார்களோ சிந்திக்கின்றார்களோ அவர்களுக்கு பதினாறும் கிடைத்து பெரு வாழ்வு வாழ்வார்கள் என கூறுகிறார் ராமாயணத்தை எழுதிய கம்பர்.
அதாவது ராமனை வழிபட அவர்களுக்கு நல்லொழுக்கம் ,கல்வி ,அறிவு ,திறமை, ஆயுள், இளமை,துணிவு,பெருமை,பொன்,பொருள்,புகழ்,நிலம்,நன்மக்கள்,நோயின்ன்மை,முயற்சி,வெற்றி என பதினாறு பெற்று வாழ்வார்கள்.
உண்மையில் ராம நாமத்தை எழுதி வழிபட வாழ்க்கை மட்டும் இன்றி நம் முகமும் ராமனை போல் பிரகாசம் ஆகும்.
இருண்டு போன வாழ்க்கையை ஒளிமயம் ஆகும்,அத்தனை சக்தி படைத்தவர் ராமபிரான்.மனதில் தைரியம் இன்றி பயம் மட்டும் நம்மை வாட்டி வதைக்கும் நேரத்தில் கண்களை மூடி ராமா என்று அழைக்க மனதில் ஒரு துணிச்சல் பிறக்கும்.
ராமனின் மகிமை சொல்ல வார்த்தைகள் இல்லை.ஆதலால் நாம் நித்தம் ராமனை நினைத்து வாழ்க்கையில் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கண்டு பதினாறும் கிடைத்து வாழ்வோம்.