ராமர் காலடி தடங்கள் பதித்த முக்கிய இடங்கள்
மகாவிஷ்ணு அவதாரத்தில் மனிதனாக பிறந்து நமக்கு பாடம் போதித்த அற்புத அவதாரம் தான் ராம அவதாரம்.. அயோத்தி முதல் ராமேஸ்வரம் வரையிலும் அங்கிருந்து கடலில் பாலம் அமைத்து இலங்கை வரையிலும் கால்நடையாகவே யாத்திரை புரிந்தவர் ஸ்ரீராமர்.
அவரது திருப்பாதத் தடங்கள் பதிந்த சில தலங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
அயோத்தி
ராம ஜன்ம பூமி என்ற இந்த இடம்தான் ஸ்ரீராமர் பிறந்த ஊர். சிறு பிள்ளையாக அவர் விளையாடியதும் 14 ஆண்டு கால வனவாசத்திற்கு பிறகு அவர் அரசாட்சி செய்ததும் இங்குதான். கம்பர், துளசிதாசர் போன்றவர்களுக்கு உத்வேகம் அளித்த ஸ்ரீராம நாமத்தின் ஊற்றுக்கண் இந்த இடமாக அயோத்தி விளங்குகிறது.
பக்சர்
சித்தாஸ்ரமம், வேத சித்ரா, வேத கர்ப்பமா கிருஷ் என்று பல பெயர்கள் கொண்ட பக்சர் என்ற இடம் மிகவும் பிரசித்தி பெற்றது. விசுவாமித்திரர் ஸ்ரீராமருக்கு பலை அதிபலை ஆகிய முக்கிய மந்திரங்களை உபதேசித்த இடம் இது.
அகல்யாஸ்ரமம்
ஸ்ரீராமரின் பாதம் பட்டதால் கல்லாக இருந்த அகல்யா சாப விமோசனம் பெற்று பெண்ணாக மாறிய இடம் இது என்பது இந்த இடத்தின் சிறப்பு.
ராம் டெக்
இது, ராமகிரி என்றும் அழைக்கப்படுகிறது. ஸ்ரீராமர், லட்சுமணன், சீதை ஆகிய மூவரும் வனவாசத்தின்போது இங்கு சிறிது காலம் தங்கி இருந்தனர் என்றும் இதன் காரணமாக இது புண்ணிய தலமாகக் கருதப்படுகிறது என்றும் கூறுகின்றனர்.
சபரி
சபரி எனும் பக்தியில் சிறந்த பெண் எச்சில் படுத்தித் தந்த கனியை ஸ்ரீராமர் மனமுவந்து ஏற்ற இடம் இது. விஜயநகர சாம்ராஜ்யத்தில் உள்ள பிரசித்தி பெற்ற புராதன நகரம் ஹம்பி இங்கே துங்கபத்ரா நதி ஓடுகிறது. இதன் அருகே உள்ள மலை ‘மதங்க பருவதம்’ என்று அழைக்கப்படுகிறது. இங்கேதான் சபரி வசித்து வந்ததாக வரலாறு தெரிவிக்கிறது.
ராமேஸ்வரம்
ராம காவியத்தில் புகழ் பெற்ற இடம். ராவணனை வதம் செய்த பாவம் நீங்க ஸ்ரீராமர் சிவலிங்கங்களை நிர்மாணித்து சிவ பூஜை செய்த இடம் இது.இங்கு சென்றாலே ராமரின் அருள் உணரமுடியும்.
தலைமன்னார்
ஸ்ரீராமபிரான் இந்த தலைமன்னார் பகுதியில் பாலம் அமைத்துத்தான் இலங்கையை அடைந்தார். ராவணனை வீழ்த்தி, சீதையை மீட்டு விபீஷணனுக்கு இலங்கையின் ராஜ்யத்தை ஒப்படைத்ததும் இங்குதான். அதன் பின்னர் இங்குதான் சீதா தேவி தான் கற்புள்ளவள் என தீயில் இறங்கி நிரூபித்ததாக சொல்கிறது வரலாறு.
மாயமான் குறிச்சி
இது நெல்லை மாவட்டத்தில் உள்ள ஒரு ஊர். அன்னை சீதாவை, லட்சுமணன் கிழித்த கோட்டை தாண்டி வெளியில் வர வைக்க ராவணன் மாய மானாக உருமாறிய இடம் இது என்பதே இந்த ஊர் பெயரின் காரணமாம். நாமும் முடிந்தால் ராமர் பாதம் பதித்த ஊருக்கு சென்று வந்து ராமரின் அருள் பெறுவோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |