வடக்கே அயோத்தி போல் தெற்கே ராமருக்கு உள்ள முக்கியமான கோயில்
ராமர் அவர் வெற்றியின் சின்னமாக பார்க்க படுகிறார். அப்படியாக, ராமர் கோயில்களில் நாம் ராமர் சீதை லட்சுமணன் அனுமன் ஆகியோர் இணைந்த சன்னதிகளை பார்த்திருப்போம். ஆனால் அவர்களுடன் பரதன் சத்ருக்கனனும் இணைந்த கோவிலை அயோத்தியில்தான் காண முடியும்.
அயோத்தி போலவே அனைத்து சகோதரர்களுடனும் ராமன் காட்சிதரும் சன்னதியைக் கொண்ட கோவில் தமிழ் நாட்டில் உள்ளது. அது தான் கும்பகோணம் மகாமக குளக்கரையில் இருக்கிறது. அதை பற்றி பார்ப்போம்.
தற்பொழுது சூழலில் உடன் பிறந்த சகோதர்கள் மற்றும் சகோதரிகள் தேவை இல்லாத பிரச்சனைகளால் சண்டையிட்டு பிரிந்து வாழ்கிறார்கள். ஆனால், உடன் பிறந்தவர்கள் எவ்வளவு முக்கியம் என்று ஒற்றுமையுடன் வாழ்ந்து காட்டியவர்கள் ராமர். ராமரின் சகோதரனான லக்ஷ்மணன் வனவாசம் சென்ற ராமரை ஒரு கணமும் கண் மூடாமல் கவனமாக பார்த்து கொண்டார்.
பரதனோ தன் அண்ணன் வனவாசத்தில் இருந்து மீண்டும் வீடு திரும்பும் வரை 'அண்ணனுக்குரிய நாட்டை நான் ஆளமாட்டேன்' என சொல்லி அவரது பாதுகையை சிம்மாசனத்தில் நிறுத்தி வைத்தான். பரதனுக்கு சேவை செய்தான் இன்னொரு தம்பி சத்துருக்கனன்.
பகவானுக்கு சேவை செய்தவர்கள் லட்சுமணனும் பரதனும்.எவர் ஒருவர் பகவானுக்கு சேவை செய்கிறார்களோ அவர்களுக்கு சேவை செய்வது இன்னும் சிறந்தது என்று எண்ணி லக்ஷ்மணனுக்கும் பரதனுக்கும் சேவை செய்தான் சத்ருகனன்.
அப்படியாக, ஸ்ரீ ராமர் அயோத்தியில் தன் தம்பிகளுடன் பட்டாபிஷேகத்தன்று மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தார். வடக்கில் உள்ளவர்களுக்கே இந்த அருள் கிடைத்தது. அதே போல் தென்னக மக்கள் இந்த தரிசனத்தை தினமும் காண வேண்டும் என்ற எண்ணம் தெற்கிலிருந்து சென்ற விபூஷணன் போன்றவர்களுக்கு ஏற்பட்டது.
அந்த எண்ணம் நிறைவேறும் வகையில் கோவில் நகரான கும்பகோணத்தில் இந்த அரிய காட்சியை சிலையாக வடித்து கோவில் அமைத்தனர். இங்கே ராமனுக்கு பட்டாபிராமன் என்று பெயர். ராமனுக்கு அருகே சீதை. சாமரம் வீசும் நிலையில் சத்ருகனன். வில்லேந்தி பாதுகாப்பு அளிக்கும் நிலையில் லஷ்மணன்.
குடை பிடிக்கும் நிலையில் பரதன். தும்புரா இசைத்து ராமனின் புகழைப் பாடும் நிலையில் ஆஞ்சநேயர் ஆகியோர் உள்ளனர். மேலும், ராமர் கோவில்களில் ராமனும் சீதையும் ஒரே சன்னதியில் இருந்தாலும் தனித்தனி சிலைகள் தான் வடிவமைக்க பட்டு இருக்கும்.
ஆனால் இங்குள்ள கோயிலில் மட்டும் தான், ராமனும் சீதையும் ஒரே ஆசனத்தில் அமர்ந்துள்ளதைக் காண முடியும். ஆக, நமக்கு அயோத்தி போகும் வாய்ப்புகள் இல்லை என்றாலும் நம் தமிழ் நாட்டில் ஆன்மீக பூமியான கும்பகோணத்தில் உள்ள இந்த ராமர் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்து வருவோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |