பிறவி பலனை உணர ராமேஸ்வரம் போய் வாருங்கள்
உலகம் மிகவும் பெரியது.அதில் ஒவ்வொரு படைப்புகளும் அற்புதங்கள் நிறைந்தவை.அப்படியாக தமிழ் நாட்டில் நிறைய அதிசயம் வரலாறு நிறைந்த கோயில்கள் இருக்கிறது.
அதில் ஒவ்வொரு கோயிலுக்கு சென்று வர நமக்கு வாழ்க்கையில் ஒவ்வொரு மாற்றம் நடக்கிறது.அப்படியாக தமிழ் நாட்டில் காசிக்கு அடுத்தபடியாக பாவங்கள் நீங்கும் தலமாக ராமேஸ்வரம் தலம் இருக்கிறது.
இங்கு ஒருவர் சென்று வர வாழ்க்கையில் பல மாற்றங்கள் நடப்பதை உணரமுடியும்.இப்பொழுது ராமேஸ்வரம் கோயிலும் அதனுடைய சிறப்புகள் பற்றி பார்ப்போம்.
இக்கோயிலின் பெயர் இராமநாத சுவாமி . மூலவர் - சீதா தேவி மணலால் உருவாக்கப்பட்ட சிவலிங்கம்
இந்தியா பொறுத்த வரைக்கும் வட இந்தியாவில் அமைந்துள்ள காசியில் கங்கையில் குளித்து, காசி விஸ்வநாதரை வணங்கினால் முக்தி கிடைக்கும் என்பார்கள்.
அந்த போல் தெற்கில் அமைந்துள்ள இந்த ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்தமும், கோயிலில் அமைந்துள்ள 22 தீர்த்தங்களில் நீராடி ராமநாத சுவாமியை வணங்கினால் செய்த பாவங்கள் நீங்கி மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
கோயிலுக்குக்கு எதிரே அமைந்ததுள்ள அக்னி தீர்த்தம் எனும் கடலில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
ராமேஸ்வரம் கோயில் வழிபாடு செய்ய விரும்புபவர்கள் முதலில் அக்னி தீர்த்தம் என கூறப்படக்கூடிய சமுத்திரத்தில் நீராடி விட்டுத்தான், கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களை குளித்துவிட்டு, உடையை மாற்றிக் கொண்டு, சுவாமியை தரிசனம் செய்ய வேண்டும் என்பது ஐதீகம்
இராவணனிடமிருந்து மீட்கப்பட்ட சீதா தேவி தன் கற்பை நிரூபிக்க, அக்னி பிரவேசம் செய்ய வைத்தார் ராமன்.
அப்போது சீதையின் கற்புத் திறன், அக்னியையே சுட்டதாகவும், அதை தாங்க முடியாத அக்னி பகவான், கடலில் மூழ்கி, தன் வெப்பத்தைத் தணித்துக் கொண்டதாக புராண வரலாறு கூறுகிறது.
இதன் காரணமாக அக்னி தீர்த்த என அழைக்கப்படுகிறது. இந்த அக்னி தீர்த்த கரையில் ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை, தை அமாவாசை ஆகிய நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க பல்லாயிரக்கணக்கானோர் கூடுவது வழக்கம்.
இராமநாதர் சிலையை உருவாக்கி சிவலிங்க பூஜை செய்த ராமபிரானின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது. அந்த தோஷம் எங்கு செல்வது என்று தெரியாமல் திணறியது.
யாரையாவது பற்றிக் கொள்ளலாமா என சென்று கொண்டிருந்த போது சிவ பெருமானின் தன் வடிவங்களில் ஒன்றான பைரவரை அனுப்பி, அந்த பிரம்ம ஹத்தி தோஷத்தை தன்னுடைய பாதத்தில் அழுத்தி பாதாளத்திற்குத் தள்ளினார்.
வாழ்க்கையை ஒரு முறையாவது உணர வேண்டும் ஆன்மிகம் பற்றி அறிந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் கண்டிப்பாக இந்த இராமநாத சுவாமி வழிபட வாழ்க்கையில் ஒரு வெளிச்சம் தெளிவு ஞானம் பிறக்கும்.
கண்டிப்பாக வாழ்நாளில் அனைவரும் ராமபிரானின் அருளை உணரவும் சிவபெருமானின் இருப்பிடம் அறியவும் இராமநாத சுவாமியை தரிசித்த வர வேண்டும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |