ஏப்ரல் மாதம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையே வேற மாதிரி இருக்கப்போகுது
ஏப்ரல் மாத கிரகங்களின் நிலைகளைப் பொறுத்து பலன்களைப் பார்ப்போம்.
ஏப்ரல் மாதத்தில் நிகழும் கிரக பெயர்ச்சிகளால், பல மங்களகரமான யோகங்கள் உருவாகவுள்ளன. இந்த யோகங்களால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஒருசில மாற்றங்கள் நிகழப்போகிறது.
அதன்படி, ஏப்ரல் மாதத்தில் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என தெரிந்து கொள்ளுங்கள்.
மிதுனம்
திருமணமானவர்கள் துணையுடன் நீண்ட பயணம் மேற்கொள்ளலாம். நிதி ரீதியாக நன்றாக இருக்கும். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நீங்கள் சில புதிய வேலைகளைத் தொடங்கலாம். மன அழுத்தம் காரணமாக உடல்நலம் தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
கடகம்
பணிபுரிபவர்களுக்கு உடன் வேலை செய்வோரின் உதவி கிடைக்கும். புதிய வேலைகளைத் தொடங்குவதிலும் வெற்றி பெறலாம். மாணவர்களுக்கு நன்றாக இருக்கும். உங்கள் கடின உழைப்பு உங்களுக்கு வெற்றியைத் தரும்.
சிம்மம்
உங்கள் அன்புக்குரியவருடனான உங்கள் உறவு மேம்படும். நீங்கள் ஒருவருக்கொருவர் அதிக நேரம் கொடுப்பீர்கள். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் செய்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கு நெருக்கமான ஒருவர் உங்களை ஏமாற்றக்கூடும்.
கன்னி
திருமணமானவர்களின் இல்லற வாழ்க்கை மேம்படும். வேலையில் இருப்பவர்கள் தங்கள் வேலையில் வெற்றி பெறுவார்கள். செயல்திறன் சிறப்பாக இருக்கும். நல்ல வருமானம் கிடைக்கும். மாணவர்களுக்கு இம்மாதம் நன்றாக இருக்கும். படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.
கும்பம்
துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள். உங்கள் ஆளுமையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வேலை செய்பவர்களுக்கு லாபம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. உங்களுக்கு பெரிய ஊக்கத்தொகை கிடைக்கலாம்.