நாய் அழுவது போல் கனவு வருகிறதா? சாஸ்திரங்கள் சொல்வது என்ன?
மனிதனுக்கு உறக்கம் என்பது மிகவும் அவசியமான ஒன்று. அப்படியாக, ஒரு மனிதன் நல்ல உறக்கம் கொள்ளும் பொழுது தான் அவனுடைய மனமும் உடலும் ஆரோக்கியமாக இருக்கிறது. அந்த வகையில் நாம் உறங்கும் பொழுது கனவு என்பது கட்டாயம் வரக்கூடிய ஒன்று தான். எந்த ஒரு மனிதனாலும் வருகின்ற கனவை தவிர்க்க முடியாது.
மேலும், கனவுகள் நம்முடைய வாழ்க்கை தொடர்பான சில அறிகுறிகளை விட்டு செல்கிறது என்றே சொல்லலாம். அந்த வகையில், நம் கனவுகளில் நாய் அழுவது போல் கண்டால் என்ன பலன் என்று பார்ப்போம். ஒருவர் கனவில் நாய் அழுவது போல் வருவது சிறப்பாக கருதப்படுவதில்லை.
அதாவது கனவுகளில் நாய் அழுவதை போல் பார்க்கும் பொழுது நமக்கு எதிர்மறை நிகழ்வுகள் நடக்க இருப்பதை குறிப்பதாக சொல்லப்படுகிறது. நம் வாழ்க்கையில் நாம் எதிர்பாராத கெட்ட செய்திகளை கேட்கக்கூடும் என்கிறார்கள்.
அதனால் நாய் அழுவதை கனவில் காணும் பொழுது நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறான கனவு வரும் பொழுது நாம் பதட்டம் அடையாமல் வரும் ஆபத்துகளை தெளிவாக சிந்தித்து எதிர்கொண்டால் வரும் பிரச்சனைகளை எளிதாக கடக்க முடியும் என்கிறார்கள்.
கனவில் ஒன்றுக்கும் மேற்பட்ட நாய்கள் அழுவது போல் கண்டால் நம் திருமண வாழ்க்கையில் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும் என்கிறார்கள். மேலும், நம்முடைய கனவுகளில் நாய் துரத்துவது போல் வந்தால் நம் வாழ்க்கையில் எதிர்பாராத போராட்டத்தை சந்திக்க நேரிடும் என்கிறார்கள்.
மேலும், இவ்வாறு கனவுகள் வரும் பொழுது அச்சம் அடையாமல் கால பைரவர் வழிபாடு செய்யலாம். அல்லது நம்முடைய குலதெய்வத்தை வழிபாடு செய்து வரும் ஆபத்துகளில் இருந்து நீயே காப்பாற்ற வேண்டும் என்று வேண்டுதல் வைக்க மன பதட்டம் குறையும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |