யானையிடம் ஆசீர்வாதம் வாங்குவதற்கு பின்னால் இருக்கும் தெய்வீக ரகசியங்கள்

By Sakthi Raj Jul 22, 2025 03:30 PM GMT
Report

பொதுவாக, நாம் கோயில்களுக்கு சென்றால் சுவாமி தரிசனம் முடித்து பிரகாரத்தை சுற்றி வரும் பொழுது யானையிடம் நின்று ஆசையாக ஆசீர்வாதம் வாங்க வேண்டும் என்று ஆசைக் கொள்வோம். அப்படியாக, யானையிடம் ஆசீர்வாதம் வாங்குவதற்கு பின்னால் இருக்கும் தெய்வீக ரகசியத்தைப் பற்றி பார்ப்போம்.

யானை மட்டும் தான் தினமும் மூலிகை தாவரங்களை மட்டும் உண்டும் மிருகங்களில் மிகவும் பலம் உள்ளதாக இருக்கிறது. மேலும், யானை மிகவும் மகத்தான தெய்வீக அம்சம் பொருந்தியது. அதோடு, உலகில் வாழும் உயிரினங்களில் இரண்டு நாசித் துவாரங்கள் வழியாகவும் ஒரே நேரத்தில் சுவாசிக்கும் தன்மை யானைக்கு மட்டுமே உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

யானையிடம் ஆசீர்வாதம் வாங்குவதற்கு பின்னால் இருக்கும் தெய்வீக ரகசியங்கள் | Reason Behind Elephant Blessings In Tamil

மனிதர்களாகிய நமக்கு தினமும் 24 நிமிடங்களுக்கு ஒருமுறை நம்முடைய சுவாசமும் ஒரு நாசித் துவாரத்திலிருந்து இன்னொரு நாசி துவாரத்தில் மாறிக்கொண்டே இருக்கும். மேலும், மனிதர்களாகிய நமக்கும் கூட தினமும் சுவாசத்தை கட்டுப்படுத்தும் மற்றும் முறைப்படுத்தும் ஆன்மீக முயற்சிகளுக்கு சரகலை என்று பெயர்.

மேலும், மனிதனுக்கு பிராணயாமம், வாசியோகம் போன்றவைகளும் நமது சுவாசத்தை தெய்வீகத் தன்மைக்கு முன்னேற்றம் அடைய வைக்கும் ஆன்மீக பயிற்சி முறைகளாகும். இவ்வாறு பயிற்சி பெற்றவர்கள் எப்போதும் இரண்டு நாசித் துவாரங்கள் வழியாகவும் சுவாசிக்கும் திறமையை பெற்றுவிடுவார்கள்.

உங்களின் பெயரின் முதல் எழுத்து B என்று தொடங்குகிறதா ? உங்கள் குணாதிசயங்கள் இதுதான்

உங்களின் பெயரின் முதல் எழுத்து B என்று தொடங்குகிறதா ? உங்கள் குணாதிசயங்கள் இதுதான்

மேலும், வாசியோகம் அல்லது பிராணாயாமத்தில் குறிப்பிட்ட நிலையை எட்டியவர்கள் இதற்கு சுழுமுனை வாசி யோகம் என்று பெயர். இதில் யானை இயற்கையாகவே ழுமுனை வாசியோகம் கொண்டது.

அதனால் அதன் தும்பிக்கையை வைத்து நமக்கு ஆசீர்வாதம் செய்யும் பொழுது மகாலட்சுமியின் முழு அருளை நாம் பெறுகின்றோம். ஆதலால், இனி விவரம் தெரியாமல் ஆசைக்காக ஆசீர்வாதம் வாங்குவதை விட விவரம் தெரிந்து வாங்கும் பொழுது நம் மனம் இன்னும் மகிழ்ச்சி அடைகிறது. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

      

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US