இந்த நாளில் பாம்பு உங்கள் கனவில் வருகிறதா? இது தான் காரணம்
பாற்கடலில் இருந்து வெளிவந்த ஆலகால விஷத்தினை சிவபெருமான் உண்ட தினம் தான் நாக சதுர்த்தி அல்லது நாக பஞ்சமி தினமாக கொண்டாடப்படுகிறது.
அன்றைய தினத்தில் இளைஞர்கள் பலரும் விரதம் இருந்து வழிபாடு செய்ய அவர்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட தடங்கல் எல்லாம் விலகி வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் அமையும்.
பொதுவாக நமக்கு கனவுகள் வருவதுண்டு.ஆழ்மனதின் வெளிப்பாடு தான் கனவு என்றாலும் சில நேரங்களில் சம்மந்தம் இல்லாமல் கனவு வரும் பொழுது அதற்கான காரணம் கட்டாயம் இருக்கும்.
அப்படியாக பலருக்கும் நாக சதுர்த்தி நாக பஞ்சமி அன்று கனவுகள் நாகம் கனவில் வர வாய்ப்பு இருக்கிறது.அப்படி வரும் கனவுக்கு என்ன பலன் என்று பார்ப்போம்.
எந்த வித தொடர்பும் இல்லாமல் ஒரு பாம்பு அவர்கள் தலையில் அமர்ந்து இருப்பது போல் கனவு கண்டால் அவர்களுக்கு வீட்டில் இறந்த முன்னோர்களின் ஆசீர்வாதம் இருக்கிறது என்று அர்த்தம்.
ஆதலால் அவர்கள் தினமும் முன்னோர்களை வழிபட்டு நாக மந்திரங்கள் சொல்ல வாழ்க்கை இனிமையாக அமையும்.
மேலும் புதையலை ஒரு பாம்பு காவல் காப்பது போல் கனவு கண்டால் அவர்கள் வாழ்க்கையில் பண வரவு இருக்க போகிறது என்று அர்த்தம்.
அடுத்தபடியாக ஜோடியாக பாம்புகள் பின்னி இருப்பது போல் கண்டால் அந்த நபரின் வாழ்க்கையில் கால சர்ப்ப தோஷம் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது.
மேலும் பாம்பு கடிப்பது துரத்துவது போல் கனவு வந்தால் வாழ்க்கையில் அவர்களுக்கு எதோ ஒரு வகை பாதிப்பு ஏற்படப்போகிறது.
ஆதலால் அவர்கள் சற்று கவனமாகவும் தினமும் சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்ய அவர்கள் விபத்துகளில் இருந்து தப்பிக்கலாம்.
கருப்பு நிற பாம்பு கனவில் கண்டாலும் அது ஜாதகத்தில் நாக தோஷத்தின் அறிகுறியாக கருதபப்டுகிறது.
மேலும் பாம்பு பறப்பது போல் கனவு கண்டால் அவர்கள் வாழ்க்கையில் வளர்ச்சி ஏற்பட்டு வாழ்க்கையில் மிக சந்தோஷமாக வாழ போகிறார்கள் என்று அர்த்தம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |