கடவுளுக்கு தேங்காய் வாழைப்பழம் படைத்து வழிபடுவது ஏன் தெரியுமா?
வீட்டின் பூஜையில் அல்லது கோவில்களில் கடவுளுக்கு தேங்காய், வாழைப்பழம் இடம்பெறாமல் அர்ச்சனை செய்வது இல்லை.
மற்ற பழங்கள் பல இருக்கும்போது, குறிப்பாக வாழைப்பழமும், தேங்காயும் கடவுளுக்கு வைத்து வழிபடுவது ஏன் தெரியுமா?
பொதுவாக, ஒரு பழத்தை உண்டபின், அதன் கொட்டையை எறிந்தாலோ அல்லது பழத்தை தூக்கிபோட்டாலோ அது மீண்டும் முளைத்துவிடும்.
ஆனால், வாழைப்பழத்தை மண்ணில் வீசினாலோ அல்லது சாப்பிட்டு விட்டு தோலை எறிந்தாலோ அது மீண்டும் முளைக்காது.
அதுபோல்தான், தேங்காயும் அதை கடவுளுக்கு உடைத்து படைத்தபின், சாப்பிட்டுவிட்டு அதன் ஓட்டை மண்ணில் எரிந்ததாலோ அது மறுபடியும் முளைக்காது.
எனவே தான், இந்த வாழைப்பழமும் தேங்காயும் பிறவி அடையாத முக்தி நிலையோடு ஒப்பிடப்பட்டு அவை கடவுளுக்கு படைக்கப்படுகின்றன.
மற்ற பழங்களில் இருந்து மீண்டும் முளைப்பதால் எச்சில் பட்டது எனக் கருதி கடவுள் வழிபாட்டில் அவற்றிற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
ஆனால், வாழைப்பழமும் தேங்காயும் பிற உயிரினங்கள் சாப்பிட்டு வீணாக்கியத்திலிருந்து முளைப்பதில்லை. எனவே தான், அவை கடவுளுக்குப் படையலாக படைக்கப்படுகின்றன.
எனவேதான், வாழைப்பழத்தையும் தேங்காயையும் கடவுளுக்கு படைத்து வழிபடும் வழக்கத்தை நம் முன்னோர்கள் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |