கண் திருஷ்டி விலக செய்யவேண்டிய 7 எளிய பரிகாரங்கள்
நம் ஊர்களில் காலம் காலமாக சொல்லும் பழமொழி சொல்லடி பட்டாலும் கண்ணாடி படக்கூடாது என்று.அதாவது ஒரு மனிதன் அவனுடைய தீய எண்ணங்கள் கொண்டு பார்க்கும் பார்வை எதிர்தரப்பினரை கடுமையாக பாதித்து விடும்.
அதிலும்,குறிப்பாக எதிர்தரப்பினர் சற்று பலவீனமான மனநிலைகொண்டவர்களாக இருந்தால் அவர்களை இன்னும் தீவிரமான பாதிப்பிற்கு ஆளாக்கிவிடும்.அவ்வாறு ஒருவர் கண் திருஷ்டியால் பாதிக்க படும் பொழுது அவர்களுக்கு உடல் உபாதைகள்,தொழில் நஷ்டம்,இழப்புகள் போன்றவை உருவாகும்.
ஆதலால் தான் மக்கள் தாயத்து கயிறுகள் போன்றவற்றை வாங்கி கட்டிக் கொள்கிறார்கள்.அப்படியாக,நமக்கு எந்த ஒரு கண் திருஷ்டி ஏற்படாமல் இருக்க நாம் கடைபிடிக்க வேண்டிய 7 வழிமுறைகள் பற்றி பார்ப்போம்.
1.கண் திருஷ்டி பாதிப்பு ஏற்படாமல் இருக்க நெற்றிக்கு இடையில் மஞ்சள் நிற பொட்டு வைக்க தீய கண் பார்வைகளை திசை திருப்பவும்,நேர்மறை சக்தியை ஊக்குவிக்கவும் பயன்படுகிறது என்று சொல்லப்படுகிறது.
2.நீங்கள் ஏதேனும் நிகழ்ச்சிகள் சென்று வீடு திரும்பும் பொழுது அன்றைய இரவு குடும்பத்தினருக்கு சூடம் சுற்றி வாசலில் வைப்பது நல்ல பலனை கொடுக்கும்.
3.புனித தீர்த்தங்கள் கொண்டு வந்து வீட்டில் தெளிப்பது அல்லது புனித நீர்களில் நீராடுவது போன்ற விஷயங்களும் நம்முடைய கண் திருஷ்டி நீங்க உதவுகிறது.
4.குழந்தைகளாக இருந்தால் அவர்களுக்கு கட்டாயம் நெற்றியில் கருப்பு நிற பொட்டு வைப்பது அவர்களை பல தீய அதிர்வுகளில் இருந்து நம்மை காப்பாற்றும்.
5.ஆண் பெண் இருவரும் ருத்ராட்சையை அணிந்து கொள்வது மிகவும் நன்மை பயக்கும்.இது நமக்கு ஒரு தெய்விக சக்தியை வழங்குவதோடு நேர்மறை ஆற்றலை பெருக்கும்.
6.கண் திருஷ்டி விலக பிள்ளையார் கோயிலுக்கு சென்று தேங்காய் உடைத்தும் வழிபாடு செய்யலாம்.அது நல்ல நிவாரணம் வழங்கும்.
7.குளிக்கும் நீரில் கல் உப்பு சேர்த்து குளிப்பதும் நம்முடைய எதிர்மறை ஆற்றலை விலக்கி நேற்மறை சக்தியை பெருக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |