உங்களுக்கு ஜாதகத்தில் செவ்வாய் திசை நடக்கிறதா? இந்த பதிவு உங்களுக்கு தான்
ஜோதிட ரீதியாக நாம் 12 கட்டங்கள் இருக்கக்கூடிய கிரக அமைப்புகளை வைத்து மட்டும் ஜாதகத்தை கணித்து விடமாட்டோம். தற்போது கிரகங்கள் எந்த நிலையில் இருக்கிறது. மேலும், நமக்கு என்ன தசா புத்தி நடக்கிறது என்பதை வைத்து தான் நாம் ஜோதிடத்தை கண்டிக்கின்றோம்.
அந்த வகையில், ஒருவருக்கு செவ்வாய் திசை நடக்கிறது என்றால் அவர்கள் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று பார்ப்போம். ஒருவருக்கு செவ்வாய் திசை நடக்கிறது என்றால் அவர்கள் துர்க்கை, காளி, பத்ரகாளி வனதுர்க்கை போன்ற ஆக்ரோஷமான உக்கிர தன்மையுடன் இருக்கக்கூடிய பெண் தெய்வங்களை வழிபாடு செய்வது நல்ல பலன்களை கொடுக்கும்.

மேலும், செவ்வாய் திசை நடப்பவர்கள் தமிழ் மாதத்தில் முதல் செவ்வாய்க்கிழமை அன்று ராகு காலம் ஆகிய 3 மணி முதல் 4.30 மணி வரை இந்த ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்வது துன்பங்களிலிருந்து விடுதலை பெற்று கொடுக்கும்.
பொதுவாக, செவ்வாய் லக்னத்திற்கு 8ல் அமர்ந்து அவர்களுக்கு விபத்து போன்ற ஏதேனும் கண்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் இவர்கள் கட்டாயம் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

மேலும், சுவாமிக்கு அர்ச்சனை செய்த குங்குமத்தை தொடர்ந்து இவர்கள் நெற்றியில் வைத்து வர ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் என்கின்ற தோஷம் படிப்படியாக குறைந்து விடும்.
திருமண தடை விலகும், மங்கலமான விஷயங்கள் வீடுகளில் நடக்கும், அதனால், கட்டாயமாக உங்கள் ஊரில் இருக்கக்கூடிய காளியம்மன் கோவிலுக்கு சென்று இந்த வழிபாடு மேற்கொண்டால் பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |