லக்ஷ்மி கடாட்சம் பெற வேண்டிய முக்கியமான ராசிகள் யார்? என்ன செய்ய வேண்டும்

By Sakthi Raj Jul 15, 2026 04:18 AM GMT
Report

ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையில் லட்சுமி கடாட்சம் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. லட்சுமி கடாட்சம் நிறைந்து இருந்தால் தான் அவர்களுக்கு வாழ்க்கையில் நல்ல செல்வ வளம், மகிழ்ச்சி ஆகியவை கிடைக்கும். அந்த வகையில், குறிப்பிட்ட சில ராசிகள் லட்சுமி கடாட்சம் பெற செய்ய வேண்டிய விஷயங்களை பற்றி பார்ப்போம்.

அதாவது லட்சுமி கடாட்சம் பெறுவதற்கு மகாலட்சுமி வழிபாடு செய்ய வேண்டிய முக்கிய ராசிகளாக கடகம், கும்பம், தனுசு மற்றும் மீன ராசி இருக்கிறார்கள்.

கடகம்:

இவர்களுக்கு சுக்கிரன் பாதகாதிபதியாக இருப்பதால் பெண்களுக்கு இதனால் சிக்கல்கள் வரலாம். இவர்கள் செந்தாமரை அல்லது நல்ல வாசம் மிகுந்த பூக்களை கொண்டு மகாலட்சுமி தேவியை வழிபாடு செய்வதும் பூஜை அறையை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருப்பதும் இவர்களுக்கு நன்மையை பெற்றுக் கொடுக்கும்.

12 ராசிகளின் வாழ்வை மாற்றும் சக்தி வாய்ந்த மந்திரங்கள்.. உங்களுக்கான மந்திரம் என்ன?

12 ராசிகளின் வாழ்வை மாற்றும் சக்தி வாய்ந்த மந்திரங்கள்.. உங்களுக்கான மந்திரம் என்ன?

தனுசு: 

தனுசு ராசிக்கு ஆறாம் இடத்தில் அதிபதியாக சுக்கிர பகவான் வருவதால் இவர்கள் வெள்ளிக்கிழமை அல்லது வியாழக்கிழமைகளில் கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்வதும் சிங்கப்பெருமாள் கோவிலுக்கு செல்வதும் கோவில்களில் மங்கள வாத்தியங்களுக்கு உதவி செய்ததும் இவர்கள் வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளை தீர்த்து கொடுக்கும்.

கும்பம் : 

கும்ப ராசியினர் வைபவ லட்சுமி வழிபாடு செய்வது மற்றும் மல்லிகை மலர்கள் சாற்றி வழிபாடு செய்வது கருப்பு நிறத்தை தவிர்ப்பது மற்றும் வெள்ளி ஆபரணங்கள் அணிவது இவர்களுக்கு நல்ல பலன்களை பெற்றுக் கொடுக்கும்.

மீனம் : 

மீன ராசியினர் கஜலட்சுமி வழிபாடு செய்வது மிகச் சிறந்த பலனை பெற்றுக் கொடுக்கும். இவர்கள் பணத்தை சேமிப்பதற்கு முதலில் கற்றுக் கொள்ள வேண்டும். அதைவிட, பணத்தை சேமித்து சொர்ண தானம் செய்வது இவர்களுக்கு மிகச்சிறந்த பிரன்களை பெற்றுக் கொடுக்கும்.

மேலும், என்ன விஷயங்களை பின்பற்ற வேண்டும் என்பதை பற்றி இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம் 


 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US