2026: சனி ஜெயந்தி எப்பொழுது? அன்று 5 ராசிகள் கட்டாயம் செய்யவேண்டியவை
ஜோதிடத்தில் கர்ம காரவனாக கருதக்கூடிய சனி பகவான் ஒரு மனிதனுடைய நன்மை தீமைகளுக்கு ஏற்ப அவர்களுக்கு ஆசீர்வாதத்தை வழங்குகிறார். பொதுவாக ஒரு மனிதன் நல்ல செயல்கள் செய்து விட்டால் சனிபகவானை பற்றி அவர்களுக்கு பயம் கொள்ள தேவை இல்லை.
சனி பகவான் அவர்களுக்கு எந்த நேரத்திலும் நல்ல நண்பனாகவே விளங்குவார். அந்த வகையில் ஆண்டு தோறும் ஜ்யேஷ்ட மாத அமாவாசை நாளில் சனி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்து மத நூல்களின்படி சூரிய பகவானின் புதல்வரான சனி பகவான் இந்த தினத்தில் தான் அவதரித்தார் என்பது நம்பிக்கை.

அதனால், இது மிகவும் புனித நாளாக கருதப்படுகிறது. அந்த வகையில் இந்த 2026 ஆம் ஆண்டு ஜ்யேஷ்ட அமாவாசை மே 16, சனிக்கிழமை அதிகாலை 5:11 மணிக்கு தொடங்கி, மறுநாள் அதிகாலை 1:30 மணி வரை உள்ளது. இன்றைய தினம் சனி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் பல சுப யோகங்கள் கூடும் என்பதால் அந்த நாள் ஆன்மீகத்தில் மிகவும் முக்கியமான நாளாக கருதப்படுகிறது. மேலும் இந்த வருடம் சனி ஜெயந்தி கூடுதல் சிறப்பை பெறுகிறது. காரணம் சனிக்கிழமை அன்று வர இருக்கிறது.
இதனால் சனி அமாவாசையாகவும் கருதப்படுகிறது. இந்த நாளில் நாம் புனித நீர்களில் நீராடி தான தர்மங்கள் செய்து வழிபாடு செய்வது மிகவும் புண்ணியமாக கருதப்படுகிறது.

மேலும் தற்போது சனிபகவான் மீனராசியில் இருக்கின்ற நேரத்தில் மேஷம், மீனம், கும்ப ராசிக்காரர்கள் ஏழரை சனியின் தாக்கத்தை குறைக்கவும் மற்றும் தனுசு ராசிக்காரர்கள் கண்டக சனியின் தாக்கம் குறையவும் இந்த ஐந்து ராசிகளும் சனி ஜெயந்தி அன்று குறிப்பிட்ட சில பரிகாரங்கள் செய்வதால் அவர்கள் சனியின் உடைய தாக்கத்திலிருந்து விலகலாம்.
அப்படியாக, இந்த நாளில் ஐந்து ராசிக்காரர்களும் சனிபகவானுக்கு எண்ணெய் அபிஷேகம் செய்தும் , எள்ளு கருப்பு உடைகள் தானம் செய்வது மற்றும் சனி பகவானுடைய மந்திரங்களை ஜெபிப்பது போன்ற வழிபாடுகள் சிறந்த பலனை கொடுக்கும்.
இவர்கள் இந்த நாளில் மனதார சனி பகவானை நினைத்து சில தான தர்மங்கள் செய்வதால் இவர்களுக்கு வாழ்க்கையில் சனிபகவானுடைய தோஷம் குறைந்து நல்ல நேர்மறை தாக்கும் உண்டாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |