கேது தோஷம் விலக செய்ய வேண்டிய பிரத்யேக குறிப்புகள் ..
ஜோதிடத்தில் நமக்கு அதிக அளவில் கெடு பலன்களை வழங்கக் கூடியவர் கேது பகவான். ஒருவருடைய ஜாதகத்தில் கேது பகவான் கோச்சாரத்தில் எந்த வீடுகளில் பயணிக்கின்றாரோ அந்த வீட்டின் காரகத்துவம் சார்ந்த கெடு பலன்களை அந்த நபர் அனுபவிக்க வேண்டிய நிலை வருகிறது.
அதிலும் குறிப்பாக தொழில் செய்து கொண்டிருப்பவர்களாக இருந்தால் அல்லது மாத ஊதியத்திற்காக வேலை பார்த்துக் கொண்டிருப்பவர்களாக இருந்தால் கேது சரியான இடத்தில் அமராத பொழுது அவர்களுக்கு கேதுவால் நிறைய பிரச்சினைகள் உண்டாகும்.
இதனை தீர்ப்பதற்கு முன்னோர்கள் எளிய குறிப்புகளை கொடுத்திருக்கிறார்கள். அதைப்பற்றி பார்ப்போம்.

இந்த கேது தோஷம் விலக நமக்கு முதல் முதலில் தேவையான பொருட்கள் ஒரு வாழைத்தண்டு திரி, தாமரை தண்டு திரி, நல்லெண்ணெய் பிறகு உங்களுடைய ஊர் அல்லது வீட்டின் அருகில் இருக்கக்கூடிய காவல் தெய்வங்களுக்கு வாழைத்தண்டு திரி அல்லது தாமரை தண்டு திரி போட்டு நல்லெண்ணெய் ஊற்றி 21 அகல் விளக்குகள் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.
அதிலும் குறிப்பாக அமாவாசை பௌர்ணமி அல்லது தமிழ் மாத பிறப்பின் பொழுது இதனை தொடர்ந்து 21 நாட்கள் முழு நம்பிக்கையுடன் செய்து வந்தால் கேதுவால் ஏற்படக்கூடிய மிகப்பெரிய பாதிப்புகள் குறைந்து சுப பலன்கள் கிடைக்கும்.
அதனை தொடர்ந்து விநாயகப் பெருமானை வழிபாடு செய்தாலும் கேதுவாய் ஏற்படக்கூடிய தடைகள் யாவும் விலகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |