ஒரு வீட்டில் ஒரே ராசி ஒரே நட்சத்திரம் இருந்தால் என்ன நடக்கும் தெரியுமா?
ஒவ்வொருவருடைய பிறந்த ராசி மற்றும் நட்சத்திரம் என்பது முப்பிறவிகளின் கர்ம வினைகளின் தொடர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது. அந்த வகையில், ஒரு வீட்டில் ஒரே ராசி மற்றும் ஒரே நட்சத்திரம் கொண்டவர்கள் இருந்தால் என்ன நடக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.
அதாவது, ஒரே ராசி ஒரே நட்சத்திரம் கொண்டவர்களுக்கு துன்பம் வந்தாலும் இன்பம் வந்தாலும் ஒரே நேரத்தில் வந்து விடும். ஆதலால், இன்னும் கடினமான காலமாகவே குடும்பத்தில் காணப்படும்.
அப்படியான வேலையில் நாம் திருச்செந்தூர், ராமேஸ்வரம் சென்று கடலோர கோவில்களுக்கு சென்று கடலில் நீராடி அங்கே இருக்கக்கூடிய இறைவனை தரிசித்து மனதார நம்முடைய பிரச்சனைகள் தீர வேண்டும் என்று வழிபாடு செய்தால் நிச்சயம் தாக்கம் குறையும்.

கோவில்களுக்கு செல்வதோடு அங்கு கடலில் நீராடி தரிசனம் பெற்று வந்தால் தடைகள் யாவும் விலகி நினைத்தது உடனடியாக நிறைவேறும்.
அதே போல், நவகிரக ஆலயத்திற்கு சென்று எள் எண்ணெய் தீபம் ஏற்றி 27 முறை சுற்றி வந்து வழிபாடு செய்தால் ஜாதகத்தில் இருக்கக்கூடிய தோஷம் குறையும். இவ்வாறு ஒரே ராசி ஒரே நட்சத்திரம் கொண்டவர்கள் ஒரே வீட்டில் வசிக்கின்ற நேரத்தில் இந்த பரிகாரம் செய்தால் நிச்சயம் நல்ல மாற்றம் உண்டு.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |