உங்கள் ஜாதகத்தில் இந்த கிரகம் பலவீனமாக உள்ளதா? இந்த பரிகாரங்களை செய்யுங்கள்
ஜோதிட ரீதியாக 9 கிரகங்கள் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. அந்த வகையில், ஜாதக ரீதியாக 9 கிரகங்களும் எல்லாம் சரியான அமைப்புகளில் இருக்கும் என்று சொல்ல முடியாது. ஒரு சில கிரகம் அமைப்புகள் பலவீனமாக இருக்கும். அதனால் மனம் தளர வேண்டாம். அந்த கிரகத்தினால் வரக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்கு நாம் பரிகாரங்களை செய்யலாம்.
சூரியன்:
சூரியனை மகிழ்விக்கவும் கிரகம் பலமாகவும் தினமும் காலையில் எழுந்து சூரிய ஒளியில் உட்காருங்கள். சூரிய அஸ்தமனத்திற்கு முன்பு உங்களுடைய உணவை சாப்பிட்டு முடித்து விடுங்கள்.
சந்திரன்:
தண்ணீரை வீணாக்குவதை தவிர்த்தாலே போதுமானது.
செவ்வாய்:
தரையில் தூங்க பழகுங்கள். வாரம் ஒரு முறை குறிப்பாக செவ்வாய் கிழமைகளில் உடல் ரீதியாக சரியாக இருப்பவர்கள் என்றால் நிச்சயம் உணவில் உப்பு சேர்ப்பதை தவிர்த்துக் கொள்ளலாம்.

புதன்:
உங்களுடைய பற்கள் மற்றும் உங்களுடைய வாய் மிகவும் சுத்தமாக வைத்திருக்க பார்த்துக் கொள்ளுங்கள்.
வியாழன்:
சைவ உணவை எடுத்துக் கொள்ளுங்கள். நெற்றியில் குங்குமம் வைத்து வரலாம்.
சுக்கிரன்:
உங்களுடைய தலைமுடியை சரியாக பராமரித்துக் கொள்ளுங்கள்.

சனி:
உங்களுடைய வீடுகளை விளக்கு நிறைந்ததாக வைத்திருங்கள். உணவு தயாரிப்பதற்கு கடுகு எண்ணெய் பயன்படுத்தலாம்.
ராகு:
தூய்மையாக இருக்க பழகுங்கள். துர்கா சாலிசா பாராயணம் செய்யுங்கள்.
கேது:
எப்போதும் உங்களுடைய காலணிகள் மற்றும் செருப்புகளை சுத்தமாக வைக்க பழகிக் கொள்ளுங்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |