செய்வினையால் பாதிக்கப்பட்டிருந்தால் எப்படி கண்டுபிடிப்பது?
ஒருவர் தனது வாழ்வில் செய்வினையால் பாதிக்கப்பட்டிருந்தால் அவருடையா வாழ்நாள் முழுவதும் கஷ்டத்தை தான் எதிர்நோக்க நேரிடும்.
வீட்டில் செய்யப்படும் ஒரு சில பூஜையின் காரணமாகவும் செய்வினை பாதிப்பில் இருந்து விடுப்படலாம். அது எப்படி என பார்க்கலாம்.
செய்வினை
செய்வினை, ஏவல், பில்லி, சூனியம் போன்றவைகள் ஒருவருடைய வாழ்வில் தீங்கு விளைவிக்கும் செயன்முறையாகும். மாந்திரீகம், தாந்ரீகம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி செய்யும் பூஜைகளை செய்வினை என்கிறார்கள்.
அப்படி ஒருவர் செய்வினையால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர் என்ன செய்யலாம் என தெரிந்துக்கொள்வோம்.
அறிகுறிகள்
மண்ணால் செய்யப்பட்ட பானையில் துளசி இலைகளை போடவும், அது வாடி விட்டால் தீய சக்திகள் இருப்பதாக அர்த்தம். வாடாமல் இருந்தால் வீட்டில் எந்தவொரு தீய சக்தியும் இல்லை என அர்த்தம்.
உங்கள் கைகளால் கோர்க்கப்பட்ட எலுமிச்சையை துர்க்கை அம்மனுக்கு அணிவித்து, அதில் இருந்து ஒரு பழத்தை வாங்கி வீட்டின் ஒரு பக்கத்தில் வைக்க வேண்டும். அப்படி வைக்கும் அந்த பழமானது ஒரு வாரத்தில் வாடி இருந்தால் தீய சக்தி இல்லையென்று அர்த்தம். அதுவே அழுகி இருந்தால் தீய சக்தி இருப்பதாக அர்த்தம்.
செய்வினை நீங்க
மந்திரம் செய்வினை நீங்குவதற்கு பூஜை செய்பவர்கள் கருப்பு நிறத்தில் ஆடை அணிந்து, கையில் கருகமணி மாலை வைத்து கருப்பு நிற துணியில் வடக்கு நோக்கி அமர்நதிருந்து சிவப்பு நிறப்பூக் கொண்டு முதலில் 18 முறை இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
பின் விளக்கின் சுடரை பார்த்துக்கொண்டு 1008 முறை மந்திரத்தை ஜெபித்து உரு ஏற்ற வேண்டும். ஜெபமானது முடிந்தவுடன் தேங்காயில் தீபம் ஏற்றி 3 முறைகள் காளியை சுற்றி வணங்க வேண்டும்.
இறுதியாக அந்த தேங்காயை 3 முறை சுற்றி தெற்கு நோக்கி எரிக்க வேண்டும். பூஜை செய்தவர் நல்லெண்ணெய் தேய்த்துக் குளித்து குங்குமம் வைத்து கொள்ள வேண்டும்.