இன்றைய ராசி பலன்(24-10-2025)
மேஷம்:
இன்று சிலருக்கு உடல் ஆரோக்கிய குறைபாட்டால் மருத்துவரை சந்திக்க நேரலாம். திடீர் வெளிநாடு பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். உடன் பிறந்தவர்களை சற்று அனுசரித்து செல்லுங்கள்.
ரிஷபம்:
வங்கி தொடர்பாக சில பிரச்சனைகளை சந்திக்கலாம். அக்கம் பக்கத்தினரிடம் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். வருமானத்தில் உண்டான தடை விலகி நன்மை உண்டாகும்.
மிதுனம்:
இன்று காலை முதல் மனதில் பல குழப்பங்களும் யோசனைகளும் ஓடி கொண்டு இருக்கும். பெற்றோர்களை மீறி ஒரு முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாடு அவசியம்.
கடகம்:
வீடுகளில் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். பெற்றோர்கள் உங்களுக்கு துணையாக இருப்பார்கள். பொருளாதார ரீதியாக முன்னேற்றம் இருக்கும்.
சிம்மம்:
குடும்ப பிரச்சனைகள் விலகும். உறவினர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும். மனம் குழப்பமடையும். உங்கள் புத்திசாலித்தனத்தால் நெருக்கடிகளை சமாளிப்பீர்.
கன்னி:
உங்களுக்கு சில தொழில் ரீதியாக சில சிக்கல் விலகும். பெற்றோர்கள் உங்களுக்கு துணையாக இருப்பார்கள். கல்வி தொடர்பான விஷயங்களில் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும்.
துலாம்:
உங்களுக்கு மனதில் சில குழப்பங்கள் தோன்றி மறையும். பிடித்த விஷயங்கள் செய்து மகிழ்வீர்கள். பிடிவாத குணத்தை குறைத்து கொண்டால் நினைத்ததை நடக்கும்.
விருச்சிகம்:
வியாபாரத்தில் கவனம் செலுத்துங்கள். பிறரிடம் எந்த வேலைகளையும் ஒப்படைக்க வேண்டாம். எதிர்பார்த்த பணம் வரும். உறவினர் உதவியுடன் முயற்சி ஒன்றை மேற்கொள்வீர்.
தனுசு:
கணவன் உங்களுக்கு துணையாக இருப்பார்கள். திருமண வாழ்க்கையில் உங்களுக்கு நல்ல மாற்றங்கள் நடக்கும். தொழில் ரீதியாக சில எதிர்ப்புகளை சந்திப்பீர்கள்.
மகரம்:
வம்பு வழக்குகளில் சிக்கி கொள்ளாமல் பார்த்து கொள்வது அவசியம். தந்தை வழியில் உங்களுக்கு நல்ல ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தை விரிவு செய்வதை பற்றி ஆலோசிப்பீர்கள்.
கும்பம்:
ஆசிரியர்களிடம் மாணவர்கள் பாராட்டுகளை பெறுவீர்கள். முகம் தெரியாத நபரால் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
மீனம்:
பிள்ளைகள் மீது நீங்கள் முழுமையான அக்கறை செலுத்துவீர்கள். எதிர்பாராத விதமான அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும். முன்னோர்கள் ஆசீர்வாதம் கிடைக்கும் நாள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |