ஜூன் மாத்ததில் உருவாகும் அரிய 3 ராஜயோகங்கள் : ராஜா போல் வாழப்போகும் ராசியினர்!
பொதுவாகவே புதிய மாதம் பிறக்கப்போகின்றது என்றால் ராசி பலனை அறிந்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் பெரும்பாலானவர்களுக்கு இருக்கும்.
அந்தவகையில் 2026 ஜூன் மாதமானது ஜோதிட ரீதியில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது ஏனெனில் இந்த மாதத்தில் முக்கிய கிரகங்களின் நிலையில் ஏற்படவுள்ள மாற்றங்களால், ஜூன் மாதத்தில் 'கஜலட்சுமி யோகம்', 'ருச்சக ராஜயோகம்' மற்றும் 'ஹம்ச ராஜயோகம்' ஆகிய மூன்று அரிய ராஜயோகங்கள் உருவாகப்போகின்றது.

ஜோதிட சாஸ்திரத்தின்படி, இந்த யோகங்களின் தாக்கமானது அனைத்து ராசிகளிலும் பிரதிபலித்தாலும், அதிகளவான சாதக பலன்களை அனுபவிக்கப்போகும் ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
மேஷம்

ஜூன் மாதமானது மேஷ ராசியினருக்கு தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் அமோக முன்னேற்றத்தை உருவாக்கும்.
பல ஆண்டுகளின் கடின உழைப்புக்கான பலன்களை கொடுக்கும். குறிப்பாக இவர்களின் பொருளாதார நிலையில் இதுவரையில் இல்லாத அளவுக்கு முன்னேற்றம் உண்டாகும்.
தொழில் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை இரண்டிலும் முன்னேற்றத்தையும், நேர்மறையான மாற்றங்களையும் காணப்போகின்றார்கள். திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். சுக்கிரன் ஆசியால் மனதுக்கு பிடித்த வாழ்க்கை துணை அமையும்.
ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதம் செல்வ செழிப்பை அள்ளிக்கொடுக்கும் அதிர்ஷ்டம் நிறைந்த மாதமாக அமையும்.
இவர்களின் நீண்ட கால துன்பங்களுக்கு முடிவு கிடைக்கும். அமர்ந்த இடத்திலேயே பெருமளவில் பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கூடிவரும்.
புதிய முதலீகளை செய்யும் சந்தர்ப்பம் அமையும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான யோகம் கூடிவரும். மொத்தத்தில் இந்த காலகட்டம் மேஷ ராசியினருக்கு பொற்காலமாக இருக்கும்.
கடகம்

கடக ராசியினருக்கு ஜூன் மாதமானது மகத்தான நன்மைகளையும் சொகுசு வாழ்க்கையையும் கொடுக்கப்போகின்றது.
தொழில் தளத்தில் பெரிய பொறுப்புகள் ஒப்படைக்கப்பட வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டும் ஆதரவும் கிடைக்க வாய்ப்புள்ளது.
குறித்த ராஜ யோகங்களின் பலனால்அதிகாரம் மிக்க பதவியில் அமருவதற்கான வாய்ப்பும் , சுக்கிரன் ஆசியால் செல்வ செழிப்பும் அதிகரி்க்கப்போகின்றது.