ராஜயோகம் தரும் ராஜமாதங்கி.. எந்த திதியில் வழிபாடு செய்தால் கோடி நன்மைகள் சேரும்?
நாம் இப்பொழுது தசமகா வித்யாக்களில் ஒன்றான ராஜமாதங்கி தேவியின் சிறப்பு, வழிபாடு மற்றும் பலன்களை பற்றி பார்ப்போம்.
ராஜமாதங்கி சரஸ்வதி தேவியின் அம்சமாக கருதப்படுகிறார். அவர் கலை, ஞானம் மற்றும் பொருள் செல்வம் ஆகிய மூன்றையும் நமக்கு அருள்குடிய முப்பெரும் சக்திகளின் கலவையாகக் கருதப்படுகிறார். இந்த தாயாரின் கைகளில் உள்ள வீணை ஞானத்தையும் கழுத்தில் உள்ள கிளி வளத்தையும் குறிக்கக்கூடியதாக உள்ளது.
ராஜமாதங்கி நமக்கு குபேர சம்பத்துக்களை அருளக்கூடியவர் என்பதால், நமக்கு தொழிலில் வளர்ச்சி, நல்ல லாபம், முன்னேற்றம் கிடைக்கிறது. மேலும், ராஜமாதங்கியை வழிபாடு செய்ய உகந்த நாளாக பௌர்ணமி அல்லது சப்தமி மிகவும் சிறப்பான நாளாக உள்ளது.
மேலும், இந்த தாயாரை வழிபாடு செய்யும் பொழுது வாழை இலை மீது பச்சரிசி, நெல் பரப்பி, கலசம் வைத்து, மந்திர உச்சாடனம் செய்து வழிபாடு செய்வது சிறந்த பலன் கொடுக்கும்.
அதோடு வழிபாட்டின் பொழுது "ஓம் ரீம் அங் உங் மங் ரியும் ஸ்ரீயும் ராஜமாதங்கி வாவா மமவச சர்வ காரிய ஜெயமஸ்து" என்ற மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்து வழிபாடு செய்வது நாம் நினைத்த காரியத்தை உடனடியாக நிறைவேற்றி கொடுக்கும்.
மேலும், பிரார்த்தனையின் பொழுது விரல்களை இணைத்து கும்ப முத்திரை செய்து சிறப்பு ஆகும். மதுரை ஆளும் அரசி மதுரை மீனாட்சி மற்றும் திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில்கள் ராஜமாதங்கியின் அம்சமாகவே போற்றப்படுகின்றன.
அப்படியாக ராஜமாதங்கியின் கூடுதல் சிறப்பை பற்றி இந்த காணொளியில் பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |