கோவிலுக்கு சென்றால் மணி அடிப்பது ஏன் தெரியுமா?

By Yashini May 20, 2024 06:30 PM GMT
Report

கோவிலில் அடிக்கும் மணி ஓசைக்கும், மனிதர்களின் மூளைக்கும் இடையே தொடர்பு இருப்பதாக இந்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுவாக கோவிலில் இருக்கும் மணியானது சாதாரண உலோகத்தால் செய்யப்படுவதுதில்லை.

இது காட்மியம், ஈயம், தாமிரம், துத்தநாகம், நிக்கல், குரோமியம் மற்றும் மாங்கனீஸ் உள்ளிட்ட பல்வேறு உலோகங்களால் ஆனது. 

கோவிலுக்கு சென்றால் மணி அடிப்பது ஏன் தெரியுமா? | Rules For Ringing Temples Bell

கோவிலில் இருக்கும் மணியை அடிக்கும் போது அது கூர்மையான மற்றும் நீடித்த ஒலியை ஏற்படுத்துகிறது.

அதுமட்டுமில்லாமல் கோவிலில் மணி அடிக்கும் போது அதிலிருந்து வெளிவரும் ஓசையானது மனதில் இருக்கும் எதிர்மறையான எண்ணங்களை நீங்கி மன அழுத்தம் குறைகின்றது.

பலரும் கோயிலுக்கு வெளியே செல்லும் போது அடித்து விட்டு செல்வார்கள். அவ்வாறு செய்யக்கூடாது ஏனென்றால், இவ்வாறு செய்வதன் மூலம் கோவிலின் நேர்மறை ஆற்றலை அங்கேயே விட்டு விடுவதாக சொல்லப்படுகிறது. 

கோவிலுக்கு சென்றால் மணி அடிப்பது ஏன் தெரியுமா? | Rules For Ringing Temples Bell  

இதனால் கோயில் உள்ளே வரும் போது அடித்தால் நேர்மறை எண்ணங்கள் உங்களுக்குள்ளேயே இருக்கும்.

கோயிலில் பிரசாதம் வழங்குகிறீர்கள் என்றால் கடவுளை வணங்கிவிட்டு 5 முறை மணி அடிக்க வேண்டும் என சொல்லப்படுகிறது.

அதனால் கடவுளுக்கு நெய்வேத்தியம் வழங்கினாலோ, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினாலோ கோயிலில் 5 முறை மணி அடிப்பது கட்டாயமாகும்.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US